Saturday, 14 February 2015

காதலர் தின நல்வாழ்த்துகள்

தித்தித்து பேசிய மொழி
திகட்டாமல் நெஞ்சுக்குள்ளே
தினுசாய் உள்ளுக்குள்ளே பயணிக்க
திங்களே, மதியே எங்கே போனாயோ?

தனியே உன்னோடு நான்
தவிக்கவில்லை உனக்காக
தங்கிய நினைவுகள் தங்கமாய்
தந்தன தாளமிட்டு துடித்திட - என் உயிர்
தகையே எங்கே போனாயோ?

சொட்ட சொட்ட நனைந்திட்ட பொழுதுகள்
சொர்க்கமாய் சொல்லோவியங்கள்
சொற்கள் தேனாய் இனிக்க
சொப்பனத்திலும் நீயாக
சொர்னமே நீ எங்கே போனாயோ?

சொன்ன சொல் இங்கிருக்க
சொல்லுக்கு சொல் தேடி
சொல்லாமல் போனாயே
சொல்வாயோ! நீ எங்கே போனாயோ?

நித்தம் நித்தம் கனவோடு
நித்திரையெல்லாம் உன் நினைவோடு
நிற்காமல் நிழலும் நிஜமாக
நின்னையே எண்ணியே நகருதே காலமும்
நிலவே! நீ எங்கே போனாயோ?

நீங்காத உந்தன் நிகழ்வுகள்
நீர்க்காத உன் நினைவுகள்
நீளமாய் ஓடுதே நைலாக
நீ எங்கே போனாயோ?

தில்லையில் வந்துதித்த மூத்த மொழியே
திகட்டாத இன்சுவையே
திகைக்கிறேன் உன் அழகில்
திங்களே! மதியே
நீ எங்கே போனாயோ?

என் காதல் தமிழே
இனிதே வாழ்த்துகிறேன் உனக்கு
காதலர் தினம் வாழ்த்துகள்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...