Tuesday 17 May 2011

இதயம்

இதயம் துடிப்பதில்லை - உனை
மறக்கும் நிலை வந்தால்
உனை 
மறந்த நிலை வந்தால் 
மரிக்கவும் தவறுவதில்லை

மனம்

மனம்
சிறந்த நடிகன்
எப்போதுமே சிரிக்கிறது
நீ காயப்படுத்தினாலும்
வலியையும் மறந்து.

துடிக்கும் மனம்

துடிக்கும்  மனம்
ஒரு நாள் நிற்கும்
நீ எனை மறந்தால் அல்ல
நான் உன்னை சிந்திக்க மறந்தாலே...


மனம் மாறுவதில்லை

மனதிற்கு 
ஒரு சிலரை பிடிக்கும்
ஒரு சிலரை வெறுக்கும் - ஆனால்
வெறுக்கும் நிலையில் பிடித்தவர்களும்
பிடிக்கும் நிலையில் வெறுத்தவர்களும்
எது செய்தாலும்
மனம் மாறுவதில்லை ஏன்??????


இறைவன்

இறைவன் 
ஒரு அழகான கற்பனை
இருப்பதும் தெரியாது
இல்லாததும் தெரியாது - ஆனால்
இருந்தும் இல்லாமலும்
இயற்கையாக இருக்கிறது
ஒளி வடிவத்தில்...

காதல்

நட்பு
நழுவி செல்லும் சில நேரம்
நினைவில் நெருடி செல்லும்
நெஞ்சில் ராகம் பாடி செல்லும்
நாளும் யுகமாய் மாறும்
நலம் பெயர்ந்து காதல் ஆகும்..

நட்பு

ஒரு புனிதமானது
ஒரு புரிதலானது
ஒரு முறை வந்தாலும்
ஒவ்வொரு முறை வந்தாலும்
ஒன்றை ஏதோ எடுத்துசெல்லும்
ஒன்றை ஏதோ விடுத்துசெல்லும்.

எனை மறந்தாலும்

பார்த்தவள் வந்தாள்
தேடியவளும் வந்தாள்
கண்டவளும் வந்தாள் - நிச்சயம்
அவள் மாய கன்னி - அதனால்
எனை மறந்தாலும்
அவளை மறவேன்...

ரசித்தவளை மறப்பேனோ

கண்டவளை தேடினேன்
தேடியவளை பார்த்தேன்
பார்த்தவளை ரசித்தேன்
ரசித்தவளை மறப்பேனோ
மறந்தாலும் எனை நான்...

நட்பே நழுவி போவேனோ

நாடு கொடுத்தாலும்
நகரம் கொடுத்தாலும்
நன்னிலம் கொடுத்தாலும்
நழுவி போவேனோ
நட்பாய் நீ இருக்கும் போது..

நட்பு

தோழனோ தோழியோ
தொடரும் சொந்தம்
தொடங்கும் பந்தம்
தொட்டு தொட்டு செல்லும்
நெஞ்சில் வட்டமிட்டு செல்லும்
ஒரு பட்டம் பூச்சியாய்...

நட்பு

நட்பு 
பூ அல்ல
வாடி வதங்க
அது சிற்பம்
உளி கொண்டு உறவாடினாலும்
உரிமையோடு அன்பிடும்...

நட்பு

நட்பு 
பூ அல்ல
வானம் பார்த்து பூத்திருக்க
கருங்கல் போல
மெருகேறி கொண்டே இருக்கும்
பழக பழக...

நட்பு

ஒரு பூக்காத பூ
ஒரு மலராத மொட்டு
ஒரு விரியாத மலர்
ஒரு செடியில் மட்டும் பூக்காது
ஒவ்வொரு செடியிலும் அரும்பும்
விதைக்கின்ற உள்ளங்களை பொறுத்து...

Sunday 8 May 2011

நினைவுகள் ஒரு முடிவில்லாதது


நினைவுகள் 
நிஜத்தின் முடிவில் 
நிழலின் தொடக்கத்தில் 
ஒரு முடிவில்லாதது 
மறக்க முயன்று 
நம்மை மறக்கிறோம் 
நினைவுகளின் பாதையில்...


நினைவுகள்


நினைவுகள் 

கடந்தவைகளைப் பட்டியலிட்டு 
நிஜமான நிகழ்வுகளை 
மரணமிடும்...

இதயம் காயப்படுத்தினால்

இதயம் 

காயப் படுத்தியதாய் 
சரித்திரம் இல்லை 

காயப்படுத்தினால் - அது 
இதயமே இல்லை 
சதையான பிண்டம் 

இதயம் அழுவதில்லை


இதயம் 

ஒரு நாளும் அழுவதில்லை 
ஒரு நாளும் சிரித்ததில்லை 
உணர்வுகளை உள்வாங்கி 
ரகசியமாய் மனதினை 
ஆள்கிறது, ஆட்டுவிக்கிறது....


இதயம் உள்ளே அழுகிறது


இதயம்
உள்ளே அழுகிறது
உன்னை காரணமிட்டு
உன்னை காயப்படுத்தவில்லை - ஆனால்
உன்னை தவிர
அதற்கு என்னையும் தெரியாது...

யாரையும் அளவிட்டு


யாரையும் 

அளவிட்டு நேசிக்காதீர் 
நேசிப்பு அளவானால் 
பொய் கூட வலிக்கும் 
நிஜத்தை விட...

Friday 6 May 2011

அன்பு

உள்ளத்தில் உதித்து
உணர்வுகளில் பயணித்து
உணர்ச்சிகளில் வெளிப்பட்டு
உரிமையாய் உள்ளிருக்கும்
உன்னதம் தான் அன்பு..

Thursday 5 May 2011

உள்ளத்தின் உணர்வுகளால்...

நண்பா!
உடல் வெறும் கூடு
உயிர் வெறும் உணர்வு
உள்ளம் சுமப்பதும்
உள்ளம் கொதிப்பதும்
உயிரும் உடலும் உள்ளவரை..

தீ
சொன்னவுடன் சுடுவதில்லை
தொட்டவுடன் சுடாமல்விடுவதில்லை...

நினைவுகள்
தீயல்ல தொட்டு உணர
அசைப்போட்டு காலம் தள்ளும்
உள்ளம் உருகும்
உதிரமும் உறையும்
உள்ளத்தின் உணர்வுகளால்...

கவிதை

நண்பா
வார்த்தைகளில் விளையாடி
வரிகளில் சுமக்கும்
வித்தையல்ல கவிதை - அது
உணர்வுகளின் வெளியரங்கம்...

விடை தான் அன்பு

விட்டு விட்டு போனவர்கள்
விட்டாலும் 
வரப் போவதில்லை 
விடாவிட்டாலும் திரும்ப போவதில்லை - ஆனால்
விட்டு விட்டு போனது - அவர்தம்
விடாத நினைவுகள்
விடுகதையான வாழ்க்கையில்
விசைப் போன்ற உணர்வுகள்
விலைப் போகா நேசம் - இதன்
விடை தான் அன்பு
அது உடலோடு முடிவதில்லை
உயிரோடு வாடப்போவதில்லை
காலத்தோடு பயணிக்கும்
காலத்திற்கும் பயணிக்கும்
நீ மறுத்தாலும், மறந்தாலும்

Monday 2 May 2011

நட்பே நலமா?????

நட்பே!
நீயாக நான்
நானாக நீ
நட்பே நலமா
நான் எனை கேட்கிறேன்
நானாக நீ இருப்பதால்...

நீ உடல் என்றால்
நான் உயிர் - ஏன் தெரியுமா
உடல் என்றும் பிரியாது
உயிரை விட்டு.

கலங்காதே காத்திருப்பேன்

காண்பதும் உனைத் தானே
காட்சிகளிலும் நீ தானே
கடவுளாய் உனை எண்ணி 
கத்திரிப் பூவே
கலைந்தாலும் செடியில் விட்டு
கலங்காதே காத்திருப்பேன் - உனை 
வாடாமல் பார்த்திருப்பேன்...

கடவுள் எனும் சாமியாக

கண்ணில் வைத்திருந்து
கண்ணத்தில் வழிந்தோடி
கண்ணீரில் கரைந்தாலும்
கண்மணியே கலங்காதே
கருவாய் நீ வளர
கடமையோடு காத்திருப்பேன்
கடவுள் எனும் சாமியாக...

பாதையில் காத்திருக்கிறேன் !

பூமியில் ஆயிரம் பூக்கள் 
பூவே உனைப் போல் வருமோ
பல இடங்கள் இருந்தாலும் 
பாவையே உன் இதயம் போலாகுமோ
பார்த்திருக்கிறேன் - விழி
பாதையில் காத்திருக்கிறேன்


நட்பே!

நட்பே!
உன் நிழல் எனை 
விட்டு விட்டுச்  செல்கிறது
உன் நியாபகம் - எனைத்
தொட்டு தொட்டுச் செல்கிறது..

வருவாயோ எனைத்
தழுவித் தான் செல்வாயோ
மறவாமல் ஒன்றுத் தருவாயோ
மனமகிழ்ந்து காத்திருக்கிறேன்
மறுபடியும் உனைச் சந்திக்க...



Sunday 1 May 2011

மே 1 - உழைப்பவர் தினம்

உழைத்து உழைத்து ஓடானாய்
உடம்பில் திரானியில்லாமல்
உதிரமும் வேர்வையாகி
உற்றமும் சுற்றமும்
உலைக்குத் தேடி
உயிர் வாழும் முறை - ஏன்

என் இனிய உழைப்பே - உனக்கு
எஞ்சியது தான்
எங்களுக்கு மிச்சம் - நீ
எச்சத்தோடு வாழு உயர்வாக
எண்ணம் போல் வாழ்வாகும்
எழட்டும் எழுச்சியோடு...

மற்றுமொரு நாளல்ல மே 1
மறவாமல் டிவி பார்த்திருக்க
மரமாக இல்லாமல்
மருத்தளித்து நிற்காமல்
மகிழ்ச்சியோடு வாழ்த்துவோம்
மனிதருள் மாணிக்கங்களை...

அன்பு பிரிவதில்லை

உடல்கள் பிரிந்தாலும்
உணர்வுகள் மறந்தாலும்
அன்பு பிரிவதில்லை
வாழும் மட்டும் அல்ல
வாழ்ந்த பின்னும்..

பிரிவது பெரிதல்ல
பிரிந்தாலும் மாறாமல்
பரிவோடு நினைக்க வேண்டும்
பழமையை அல்ல
பாசத்தோடு பழகியதை...

நாட்கள் போதவில்லை
நேரம் போதவில்லை
நிமிடம் போதவில்லை
நொடிகள் போதவில்லை - அன்பே 
உன்னை மட்டும் சுமப்பதால்...

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...