Tuesday 27 September 2011

சாவே! உனக்கு சாவே வராதா?...



ஆசையால் ஜனித்து
ஆர்வமாய் வளர்ந்து
ஆண்டுக்கொரு கனவோடு
ஆறாத வடுக்களையும் - என்
ஆதியோடு உடலும் சுமந்து
ஆள்வோம் என நினைக்கையில்
ஆர்பரித்துச் சென்றாயே - இல்லை
ஆள்பரித்துச் சென்றாயே
சாவே
உனக்கு சாவே வராதா?

உயிரை எடுத்துக் கொண்டு
உடலை வீசி விட்டு
உணர்வுகளை உயிர் வாங்கி
உள்ளங்களை உலையிலிட்டு - தினம்
உதயமாகும் சாவே
உனக்கு சாவே வராதா???

எண்ணங்களில் எண்ணியதை
எண்ணி எண்ணி ஏங்கியிருக்க
எண்ணம் ஈடேறுமுன்னே
எண்ணத்தை தீயிலிட்டு - அதில்
எண்ணையாய் ஆசைகளை
எண்ணத்தோடு புதையிலிடும் சாவே
உனக்கு சாவே வராதா????

கல்லறைகளை கருவறையாக்கி - தினம்
கருத்தரித்து கழுத்தறுக்கும்
கல் நெஞ்சமே!
கலங்காத உள்ளங்களும்
கலங்கிடும் பொழுதுகள் - உறவுகளை
களவாடும் சாவே
உனக்கு சாவே வராதா????

காலமெல்லாம் காத்திருந்து - கனா
காணும் காட்சியெல்லாம்
காண்போம் என பார்த்திருந்து
காயப்பட்டாலும், காந்துப்போனாலும்
காட்சிகளைத் விழித் திரையிட்டு
காத்திருக்கும் போது
காலமே(னே) காவு வாங்கலாமோ
சாவே
உனக்கு சாவே வராதா????

உடல்களை பிரதியிட்டவன்
உயிரும் கொடுத்திடுவான்
உணர்வும் கொடுத்திட்டு
உயிர்ப்பும் தந்திடுவான்
உயர்வான அறிவியல்
உன்னதம் பல செய்யும் - ஏழு
உலகாளும் தின்னமே
சாவே
உன் சாவை எதிர்நோக்கு....

அண்ணலே நீர் செய்த குற்றம்



அண்ணலே நீர் செய்த குற்றங்களை
அடுக்கி அடுக்கிப் பட்டியலிட்டால்
அந்த நொடிக்கு ஒரு முறை
அசராமல் தூக்கிலிட வேண்டும்
அந்த சுதந்திரம் எது என
அறிய உணர்த்தாமல் விட்டமையால்....


அண்ணலே நீர் செய்த முதற் குற்றம்


வெள்ளையனை வெளியேற்றி
வெளிச்சமிட்ட தியாகிகள்
வெட்கமிடும் வேதனை - அய்யகோ அய்யனே
மௌனமாய் நீர் பெற்ற சுதந்திரம்
மௌனமாய் கொல்கிறதே....
லஞ்சம் தஞ்சமடையாமல்
சீரான நிர்வாகம்
சீரோடு சென்றதே - வெள்ளை
சீமான்கள் மட்டும் கொள்ளையிட்ட போதிலும் - இன்றோ
சுதந்திரம் கொண்டாட கூட இனிப்பு கொடுத்து.
விடியாதோ சுதந்திரம் - ஆம்
இது ஒரு சுதந்திர நாள்.


அண்ணலே நீர் செய்த இரண்டாம்  குற்றம்
பன்னாட்டுப்  பரிமாற்றம்
பல நாடு வர்த்தகம்
பாவம் தியாகிகள் - அன்று
பக்குவமாய் கழட்டி விட்டது - இன்று
பரதேசி கூட சுதேசி இல்லை....

வெள்ளையரின் வாழ்வியலில்
வெழுத்ததெல்லாம் பால் என
வெட்கமின்றி பின் தொடரும் இந்தியர்கள்
வெட்ட வெளியில் அரையாடை மனிதர்கள்
வீதிக்கொரு கிளப் – கூடி
விளையாடி மகிழ பப் – அய்யகோ
விடியாதோ சுதந்திரம் - ஆம்
இது ஒரு சுதந்திர நாள்.


அண்ணலே நீர் செய்த மூன்றாம் குற்றம்
மது ஒழிக்கப் போராடி
மாதுக்களின் வலிமையால்
மரமேறி கள்ளோடு நிறுத்தியவன்
மகாத்மாவே நீர் பெற்ற சுதந்திரத்தால் – இன்றோ
மானுடம் காக்கும் அரசே
மது வியபாரியாய் – அய்யகோ
வீதிக்கொன்று விலாசமாய்
வீடுகளில் இருந்தவன்
வீதிகளில் படுத்துப் புரளும் அவலங்கள்
விடியாதோ சுதந்திரம் - ஆம்
இது ஒரு சுதந்திர நாள்.



அண்ணலே நீர் செய்த நான்காம் குற்றம்

வேலையில்லா திண்டாட்டம்
வேலையில்லாமல் போயிருக்கும்
வெள்ளையனின் பேரால்
ஒருங்கிணைந்த இந்தியா வல்லரசாயிருக்கும்
விலாசம் பெற்றிருக்கும்
மறவாமல் ஐநாவில்....


அண்ணலே
அவசரம் எதற்காக
திருவோடு ஏந்தி திரியட்டும் என்பதற்கா – இல்லை
தினம் தினம் ஏங்கித் திரிவதற்கா.
விடியாதோ சுதந்திரம் - ஆம்
இது ஒரு சுதந்திர நாள்.

அண்ணலே
நீர் சினம் பெற மாட்டீர் எனில்
தேவையா சுதந்திரம்...

பிரிட்டனைப் பிரித்த நீர்
பிரிட்டனால் பெற்றமையை
பிரிக்காமல் விட்டாயோ – இல்லை
பிரிட்டன் மறுபடியும்
பிடிக்கட்டும் என விட்டாயோ.
ஒழுக்கமற்ற இந்தியர்கள் சிலரால்.
விடியாதோ சுதந்திரம் - ஆம்
இது ஒரு சுதந்திர நாள்.

கொலு...



பொம்மையாய் பொம்மைகள்
பொம்மைக்குள் பொம்மையாய்
பொம்மைகள் அணிவகுக்க
பொம்மைகள் அலங்காரம்
பொம்மியே பொம்மைகளின் கொலு....


திருவாய் மலர்ந்தவர்
திருவருள் தருபவர்
திருவடி போற்றுவோர்
திரு க்களின் திரு உருவங்கள்
தினம் பொம்மையாய் அவதாரம் கொலு....


உருவம் தந்தவர்கள்
உருவமாய் இருப்பவர்கள்
உருவமளித்த இதயங்கள்
உருவும் உயிருமான உன்னதர்கள் - இன்று
உருவமோடு பொம்மையாய் கொலுவில்...


தினம் ஒரு கதை சொல்லி
தினம் ஒரு ராகம் பாடி
திகட்டாத சுண்டல் தந்து
தித்திக்கும் பழம் தந்து
தினுசாய் ரவிக்கை தந்து - நம் வீட்டு
திருமகள்கள் கொண்டாடும் கொலு...

சுமைகள்



1.  சுமக்க மறுத்த தருணங்கள்
     சுமந்திருந்த நினைவுகளோடு
     சுமந்த சுகத்தில்
     சுவையாய் அசைபோடுகிறது மனதில்
     சுவருக்கு வெளியே செல்லாமல்
     சுமைகளாய் நெஞ்சினுள்ளே!!!!


2.  சுடு பட்ட வலியொன்று
     சுடாமல் சுடுகிறது
     சுட்டது வார்த்தையாய்
     சுமையாய் நெஞ்சில் படிகிறது...


3.    ஆறாத வடுவொன்று
      ஆறும் கனவோடு
      ஆறாத நெஞ்சத்தில்
      ஆசையாய் பார்த்திருக்க
      ஆறாதோ சுமைகள்
      ஆறி வடியாதோ - ஆம்
       அழும் கண்ணீரோடு...


4.  அழுது அழுது பார்த்திருந்தேன்
     அழும் மட்டும் காத்திருந்தேன்
     அழுகிவிடும் சுமைகளென்று
     அழுகையாய் வெளியேற
     அழுது கொண்டே துடைக்கிறேன்
     அழுத கண்ணீரை 
     அழும் கண்களில் - இனி
     அழுகாமல் காத்திருக்க...


5.  அழுவது அற்பத்தனம்
     அழுவது கோழைத்தனம்
     அழுவது ஏமாற்றம்
     அழுவது ஓர் ஒத்திகை - என
     அழுது கொண்டே ஆறுதலிடுகிறேன்
     அழும் கண்களில்
     அழுதோடும் சுமைகளைப் பார்த்து....


6.    உயிரின் உயிரே
     உயிரற்ற ஜடமானாலும்
     உருவமற்ற உடலானாலும்
     உனக்காகவே துடிக்கும் - என்
     உள்ளிருந்து சுமக்கும் - நீ
     உதறிவிட்ட போதும்
     உன்னதமாய் சுமைதனை
     உள்ளார்ந்து சுகமான சுமைகளாய்....


7.    உள்ளம் கொதித்தாலும்
     உறங்க மறுத்தாலும்
     உள்ளிருந்து வாடினாலும் - என்
     உலகான உள்ளமே
     உயிர்ப்பாய் உயிர்ப்பிக்கும் - நம்
     சுகமான சுமைகள்....


8. இத்தனை நாளாய் - நம்
    இஷ்டப்படி இருந்தது
    இருவருக்கும் பொதுவாய்
    இருக்கும் இடத்திலிருந்து
    இம்சையாய் வாட்டுகிறது
    இதயத்தில் சுமையாய்
    இன்று....

இழந்தது



1.        இழந்தது எதுவென்று
           இறுதி வரை தெரியவில்லை
           இழந்ததை நினைவுப்படுத்தினால்
           இழக்கவில்லை எதுவுமென்று



2.         இழந்திருப்பேன் என நினைத்து
            இம்சையாய் மனதினுள்ளே
            இட்டுக்கட்டிப் பார்த்திருந்தேன்
            இதுவும் கடக்குமென்று
            இறுமாப்பு கொண்டிருந்தேன்
            இழந்தது மணித்துளிகளென்று...

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...