Tuesday 27 September 2011

சாவே! உனக்கு சாவே வராதா?...



ஆசையால் ஜனித்து
ஆர்வமாய் வளர்ந்து
ஆண்டுக்கொரு கனவோடு
ஆறாத வடுக்களையும் - என்
ஆதியோடு உடலும் சுமந்து
ஆள்வோம் என நினைக்கையில்
ஆர்பரித்துச் சென்றாயே - இல்லை
ஆள்பரித்துச் சென்றாயே
சாவே
உனக்கு சாவே வராதா?

உயிரை எடுத்துக் கொண்டு
உடலை வீசி விட்டு
உணர்வுகளை உயிர் வாங்கி
உள்ளங்களை உலையிலிட்டு - தினம்
உதயமாகும் சாவே
உனக்கு சாவே வராதா???

எண்ணங்களில் எண்ணியதை
எண்ணி எண்ணி ஏங்கியிருக்க
எண்ணம் ஈடேறுமுன்னே
எண்ணத்தை தீயிலிட்டு - அதில்
எண்ணையாய் ஆசைகளை
எண்ணத்தோடு புதையிலிடும் சாவே
உனக்கு சாவே வராதா????

கல்லறைகளை கருவறையாக்கி - தினம்
கருத்தரித்து கழுத்தறுக்கும்
கல் நெஞ்சமே!
கலங்காத உள்ளங்களும்
கலங்கிடும் பொழுதுகள் - உறவுகளை
களவாடும் சாவே
உனக்கு சாவே வராதா????

காலமெல்லாம் காத்திருந்து - கனா
காணும் காட்சியெல்லாம்
காண்போம் என பார்த்திருந்து
காயப்பட்டாலும், காந்துப்போனாலும்
காட்சிகளைத் விழித் திரையிட்டு
காத்திருக்கும் போது
காலமே(னே) காவு வாங்கலாமோ
சாவே
உனக்கு சாவே வராதா????

உடல்களை பிரதியிட்டவன்
உயிரும் கொடுத்திடுவான்
உணர்வும் கொடுத்திட்டு
உயிர்ப்பும் தந்திடுவான்
உயர்வான அறிவியல்
உன்னதம் பல செய்யும் - ஏழு
உலகாளும் தின்னமே
சாவே
உன் சாவை எதிர்நோக்கு....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...