Tuesday 4 October 2011

சிந்தையெல்லாம் சிவமயமே!


கற்றது எள்ளவாயினும் அண்டியவருக்கு
கற்பித்து பழக்கமிட்டால் - தெரிந்திடலாம்
கற்க வேண்டியது உலகளவு என...

கற்றது போதுமென
கற்றதை தொலைத்திட நினைத்தால்
கற்கவில்லை எதுவுமென
கண்டிடலாம் உண்மை நிலை...

சித்தமெல்லாம் சிவமயமென்றிருந்தால்
சிந்தையெல்லாம் சிவமிருக்கும்
சிந்தித்துப் பார்த்தாலும் சிவமே முன்னிருக்கும்
சிந்தைக்குள்ளே சிலந்தியாய்
சிந்தையில் வலையிட்டால்
சிந்திக்குமோ மனமும் சிவனையே?????

உலகெல்லாம் அவனிருக்க
உலா வரும் அன்பரினை
உள்ளுக்குள்ளே வைத்திருந்து
உள்ளே நோக்காமல்
உலகத்தில் தேடலாமோ
உன்னுள் இருக்கையிலே...

எப்படி என்னுள்ளே என
எ(இ)ப்படியோர் வினாவினை
எப்படியும் மனம் கேட்கும்
எப்போதும் சிந்தித்தால்
எப்படியும் நடந்துவிடும்
எப்படியான எண்ணமும் - அதுவே
சிந்தையின் மகத்துவம்
சிந்தையின் மூலமே சிவம்
சிவமே சிந்தை....
சிந்தையெல்லாம் சிவமயமே!!!!

2 comments:

  1. sankar..super as usual..and also very true...practically...espcially the 2 and 4th paras are very good!!!

    ReplyDelete

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...