Friday, 7 October 2011

நீர், நெருப்பு


1.        கண்களில் நீர் வழிந்தோடியது
           நெருப்பாய் அவள் நினைவுகள்

 2.       மனம் பரிதவித்திக்கிறது
           மட்டற்ற மகிழ்ச்சியில்
           மடையாய் கண்களில் நீர்
           அது ஆனந்த கண்ணீர்...

3.       விழியில் வழிந்தோடும் 
          விழாமல் வீழ்த்திவிடும் - கண்களில்
          விழும்போது கண் நீர் - நெஞ்சில்
          விழும்போது அனணயா நெருப்பு

4.        நெருப்பும் நினைவுகளும் ஒன்று
           தொடும்போது சுடும்
           தொடாமல் இருந்தால்
           தொட்டுச் செல்லும்
           நீராய் கண்களில்...

5.        நிழலாய் அவள்
           நிஜமாய் நான்
           நினைவுகள் நெருப்பாய்
           நினைந்து நினைந்து
           நின்று போகிறது 
           நிற்காமல் கண்களில் 
           நீராய் வழிந்தோடுகிறது...

6.        எண்ணம் நெருப்பானால்
           எண்ணி எண்ணி 
           எளிமையாய் ஆக்கமாகும்
           எண்ணியது நிறைவேறி
           ஆழ் மனதில் நீரிடும்
           ஆனந்தமாய்...

7.        தேடலும் நெருப்புதான்
           தேடும் போது
           தேகம் சுடும்
           தேடிய பின்
           தேகம் ஆனந்தத்தில் நீராடும்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...