1. தன்னை தானும் அறியாமல்
தன்னை தனக்கே நோக்காமல்
தன்னை தாழ்வாய் மதிப்பிட்டு
தன்னை தரணியில் அழிப்போனே
தன்னை தரிசாய் பார்க்காமல்
தன்னை தினுசாய் பார்த்தாலே
தன்னுள் சக்தி கண்டிடலாம்
தன்னை தாமும் உயர்த்திடலாம்...
2. தன்னை துட்சமாய் எண்ணியே
தன்னை அச்சமாய் பார்க்கும் பதரே
தன்னை மிஞ்சும் சக்தி உளதோ
தன்னை விஞ்சும் புத்தி உளதோ
தன்னை எண்ணி பார்த்திடடா
தன்னை தானே உணர்ந்த்திடடா
தன்னை தரணியில் உயர்த்திடடா...
3. உன் நோக்கி பார்
உள் நோக்கி பார்
உம் மனம்நோக்கி பார்
உன் வினை யாது என பார்
உன் போன்று உலகில்
உளரா எனப் பார்
உயர்ந்திடலாம் உயர்வாய் நீ....
4. சிந்தித்துப் பார்ப்போமே
சிந்தையிட்டுப் பார்ப்போமே
சிந்தையில் பார்ப்போமே
சிந்தனையில் சேர்ப்போமே
சிறகடித்து சிரிப்போமே
சின்னமாய் குறுகாமல்...
5. உணவு உண்டு உடை யுடுத்தி
உடல் களித்து உயிர் வளர்த்து
உறக்கம் தந்து உனை மறந்து
உலகில் வாழும் உயிருள் ஒன்றே
உன் நோக்கி உன் மனம் நோக்கி
உள் நோக்கி உள்ளார்ந்து நோக்கி
உலகில் வலம் வா உன்னையே வென்று வா வா....
6. ஊனமாய் உனை யாக்கி
உணவுக்குப் பார மாக்கி
உறைவிட உறுத்த லாக்கி
உன்னையே தாழ்த்தி யுருக்கி
உடலால் உயிர்தல் நலமோ
உயிரும் உடலுக்குப் பாரமோ....
உனையுருக்கி உள் நோக்கி
உன்னுள் விருட்சமாய் விழி நோக்கி
உன்னுள் உறையும் தாழ் நீக்கி
உனையும் உயர்த்திட
உலகில் உயர்ந்திட வா வா...
7. அகமென்று ஒன்றிருக்கு
அதுக்குள்ளே அறிவிருக்கு
அறியாத மூடருக்கு
அழகாய் அழகாய் கனவெதுக்கு...
அட்டைப் பூச்சியாய்
அடங்கியிருக்கும் அறிவீலிக்கு
அஞ்சும் வாழ் வெதற்கு
அணியா நகை யெதற்கு
அஞ்சறைப் பெட்டியிலே துஞ்சுவதற்கோ...
இது நம் தேசிய கவி, மகா கவி பாரதியார் அவர்களின் எழுத்தின் நடையிலே எழுத முற்பட்ட ஒரு உடனடி கவிதைகள். இதில் தவறு இருந்தாலோ அல்லது தவறுகள் இருந்தாலோ அடியேனைப் பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDelete