Sunday 15 November 2015

இலை தேடும் வேர் தேடி......(ஓர் காதல் பயணம்)


இலையும் காயும் காதலிட
இமைக்காமல் சூரியனும் தூதுமிட
இரவெல்லாம் காத்திருக்குமாம் இரண்டும்
இலை காற்றில் செய்தி சொல்ல
இலை சொன்ன சேதிக்கு
இனிப்பாய் பதில் சொல்லுமாம் காயும் கனிந்து...
இப்படியே போனதாம் பொழுதுகள்
இனிப்பிட்ட காய் கனிந்து கீழே விழ
இலை துடித்ததாம் வலியில்
இலை உதிர காற்று வந்ததாம்...
இலை உதிர்ந்து மக்கிட
இதன் முன்னர் விழுந்த கனி
இலையோடு சேர்ந்ததாம் மண்ணில்
இரண்டின் சேர்க்கையில் விதையொன்று
இன்முகமாய் விருட்சமாக தொடங்கியதாம்,,,
இந்த விதை வேரிட மண்ணும் சேர
இந்த பணிக்கு நீரும் துணை வர
இதழோரம் புன்னகைத்து துளிரிட செடியும்
இலையும் மேல் வந்ததாம்
இன்முக சூரியன் ஒளிதர பூ வந்ததாம்
இலையும் பூவோடு காதல் புரிய
இலைமறை காதலல்ல இது
இலையின் காதல் காயோடு....
இந்த காதல் இப்படியே தொடர
இதற்கு வந்ததாம் சிக்கல்
இலை துடிக்க காய் பறித்தனராம்
இலை துடித்தை யார் நோக்குவர்
இலையென இகழ்ந்தனரோ இவ்வுலகில்
இலை உதிர மண்ணில் மக்கியதாம்...
இலை மக்கி வேருக்குச் செல்ல
இலை வேராகிய மன்னனிடம் முறையிட
இலை சொன்ன சேதி கேட்டு
இருத்தல் கொள்ளாமல் வேர் துடித்ததாம்
இச்சேதி தனை நீரிடம் சொல்ல...
இன்முக வாழ்க்கையில் சிக்கலா
இனிதே பயணித்த காதலில் துயரமா
இலை நிலைக் கண்டு துயரமிட்ட நீரும்
இனிதாய் பூத்திட உரமிட்டதாம் வேருக்கு
இலையும் காத்திருந்ததாம் பூவிற்கு,,,
இலை காத்திருத்தல் அறியாமல்
இரவோடு இரவாக வீழ்த்தினான் மரம்தனை
இனிய காத்திருப்பிற்கு வந்ததே வேதனை...
இனியும் துளிர்க்க இயலா வேர்
இரவில் வெட்டி வீழ்த்திட - மக்கிய
இலை இரவெல்லாம் அழுததாம்
இலை அழுத கதை கேட்டு
இடியோடு மேகமும் முழங்கியதாம்
இலை துயர் தீர்க்க ஊரெல்லாம் நீர்
இலை தேடும் வேர் தேடி...

Friday 21 August 2015

பிரிவும் ஓர் சுகமே!!!!!

பிறக்குமோ கவிதையும் வரிகளாய் வந்துதிக்குமோ
பிறவாமல் இருந்திடுமோ சில மௌனங்கள்

பிறந்து இறந்திடுமோ சில நெருடல்கள்
பிறக்க நினைக்குமோ சோகங்கள் வார்த்தையாய்
பிறந்தது ஏனோ என நினைத்திடும் தருணங்கள் - இப்
பிறவியில் தொலைத்த அந்த நொடிகள்....


பிரிவும் ஓர் சுகமே நினைவெல்லாம் நிலைப்பதால்

பிரிவில் பிரியும் கசந்த நிகழ்வுகள்

பிரிந்திடுமோ என தவித்த நாட்கள்
பிரிவில் பரிதவித்து உணரும் நிமிடங்கள்
பிரியாவிடைகொடு பிரிவுக்கு பிரியட்டும் நொடிகள்
பிரிவும் ஓர் சுகமே!!!!!

சிற்பமே நீ ஏன் சினமானாய்?

கதையான கதைகள் நிறைய
கதையே உன் கதை என்ன?????

கதையாகிப் போனதே நேரம்...

கதைக்காமலே கடந்து போனதே
கதைக்க வருவாயோ மறுபடியும்
கதைக்க காத்திருக்கிறேன் நானும்.....

சில நேரங்களில் சில உறவுகள் 
சிக்கனமாய் முடிந்து விடுகிறது 
சில நேரங்களில் சில்லறைத்தனமாய்
சில நேரங்களில் முடிய கூடாது ஏக்கத்துடன்....

சிலையே நீ ஏன் சினமானாய்
சிக்கனமாய் முடிந்து போனாய்
சில்லறை உறவுகளில் லயித்து போனாய்
சிற்பமே நீ ஏன் சினமானாய்?

சொல்லவா சொன்னதை சொன்னபடி...

சொல்லவா சொல்ல வந்ததை 

சொல்லவா மனதில் உள்ளதை 


சொல்லவா நெஞ்சில் நிற்பதை 

சொல்லவா நீ கேட்பதால் ... 

சொல்லவா அன்று போல் 

சொல்லவா இன்று இல்லையென 

சொல்லவா மனதில் நின்றதை 

சொல்லவா மெல்ல காதோடு...

சொல்லவா விடுகதையான வாழ்க்கையை 

சொல்லவா விடை தேடும் பயணத்தை 

சொல்லவா நிழலாடும் நிஜத்தை 

சொல்லவா உள்ளதை உள்ளபடி...

சொல்லவா சொன்னவன் நானல்லவா 

சொல்லவா சொன்ன சொல் வேறல்லவா .

சொல்லவா அழைத்ததை சொல்லவா 

சொல்லவா கேட்டதை சொல்லவா....

சொல்லவா விழிகளில் நீரிட்டு 

சொல்லவா வார்த்தைகளில் தடுமாறி 

சொல்லவா சொன்னதை சொன்னபடி...

சொல்ல துடிக்கிறேன் ஏராளமாய்

சொல்ல துடிக்கிறேன் ஏராளமாய்
சொல்ல நினைக்கிறேன் தாராளமாய்
சொல்ல சொல் வாயோரமாய்
சொல்ல கொடு காதோரமாய்...
சொல்லும் சொல் நெஞ்சோரமாய்
சொல்ல தவிக்குது வெகு நேரமாய்
சொல்லடுக்கில் இல்லை சேதாரமாய்
சொல்லே சுற்றிவருது ரீங்காரமாய்...
சொல்லவா சொல் சொல்லெடுத்து
சொல்லவா சொல் உளம்திறந்து
சொல்லேன் சொல்லேன் சொல்லாய்
சொல்லத் துடிக்கிறேன் நானுமே...
சொல்லில் சொல் உளமன்றோ
சொல்ல சொல்ல கரையுமன்றோ
சொல்ல துடித்த மனமன்றோ
சொல்வாயோ சொல் எனை வெல்ல....

கதையான கதைகள்

கதையான கதைகள் நிறைய
கதையே உன் கதை என்ன?????
கதையாகிப் போனதே நேரம்
கதைக்காமலே கடந்து போனதே
கதைக்க வருவாயோ மறுபடியும்
கதைக்க காத்திருக்கிறேன் நானும்.....

சிற்பமே நீ ஏன் சினமானாய்?

சில நேரங்களில் சில உறவுகள்
சிக்கனமாய் முடிந்து விடுகிறது
சில நேரங்களில் சில்லறைத்தனமாய்
சில நேரங்களில் முடிய கூடாது ஏக்கத்துடன்....
சிலையே நீ ஏன் சினமானாய்
சிக்கனமாய் முடிந்து போனாய்
சில்லறை உறவுகளில் லயித்து போனாய்
சிற்பமே நீ ஏன் சினமானாய்?

உன்னை விட்டால் யார் உளர்????....

நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு...
நம்பியோர் கைவிடப்படார்..
நம்பினால் நடக்கும், நம்பிக்கையோடு தொடங்கு...
நம்பாதே உனையன்றி யாரையும்
எத்தனை முரண்பாடுகள்.. ஏன் இறைவா?
எள்ளி நகையாடும் போது
எண்ணமெல்லாம் வஞ்சமோடு ஏன்
எத்தனை முறை அடித்தாலும் வலிக்காது
என்ற நம்பிக்கை மட்டும் எப்படி உறுதியாக???????
உறுதியிட்டு நில் உரிமையோடு செல்
உனையன்றி யாருமில்லை வெல்ல
உனக்கான உலகிது நட்பே
உன்னை விட்டால் யார் உளர்????
உண்மை ஊமையாகாது உலகத்தில்
உளறல் காவியமாகாது உலகத்தில்
உதறலை விட்டு வீரநடையிடு
உன்னை விட்டால் யார் உளர்????....

Thursday 20 August 2015

வாடினானோ அவனும் மேகலையின் நினைவில்


வாடினானோ அவனும் மேகலையின் நினைவில்

வாடினானோ நிதமும் நினைவில் நெஞ்சில்
வாடினானோ உளமும் உருக உடலும் மெலிய
வாடினானோ மூச்சாய் முழுதாய் தேய்ந்தானோ
வாடினானோ பெண்ணில் தொலைந்தானே
வாட்டமிடும் பெண்ணே வசந்தமிடுவாயோ!!!

வாடா இதயம் உந்தன் பெயராலே!

வாடிய பயிராய் காத்திருந்தாயோ
வாடும் முகம் நோக பார்த்திருந்தாயோ
வாடாமல் அவன் வந்தானோ - உந்தனை
வாடாமல் அரவணைக்க வந்தானோ
வாடுமோ நிதமும் உந்தன் முகமும் 
வாடுமோ ஆடுமோ உந்தன் நினைப்பாய் - அவன்
வாடா இதயம் உந்தன் பெயராலே!!!!

முகமாடும் முகத்தோடு

முகமாடும் முகத்தோடு மனதில் உறவாடும்
முத்திரைப் பதிக்கும் முகமோ அகமோ
முத்தாய் சத்தாய் நிழலோ நிஜமோ

முடியா ஒருகாலும் நட்பும் தோழியே...

முகநூலோடு முடிந்திடாமல் முன் வந்து
முக்காலம் வருங்கால் வந்து இருந்திடுமோ
முடமாக்கினாயோ நட்பில் எனை ஜடமாக்கினாயோ
முடியா உன் பணியிலும் என்பணியானாயோ!

சூப்பர்

சூப்பர் ஆங்கிலம் கலந்தது
சூன்யமாய் தமிழும் மடிந்தது
சூதனமாய் வந்த மொழி

சூறை காற்றாய் கொண்டு போனதே
சூழ்நிலை கைதியானதே தமிழுமே....

வார்த்தையின்றி தவிக்கிறேன் நானுமே

வார்த்தையின்றி தவிக்கிறேன் நானுமே
வார்த்தையின்றி சொல்லிட எழுதவே
வார்த்தையும் வருமோ தொடருமோ

வார்த்தைக்கு வார்த்தை மோனையாய் எதுகையாய்
வார்த்தையே எங்கே போனாயோ - உனை
வார்க்க வாய்ப்பில்லாமல் போனாயோ?...

கவிதை சொல்லவில்லை

கவிதை சொல்லவில்லை நாங்கள்
கவிதையாய் போனதே வாழ்வும்
கவிக் கொண்டு திளைக்கிறோம்

கவிதையான எங்கள் அன்பினிலே....

கவிதை என சொல்ல - நாங்கள்
கதைக்க வந்தோம் சில
கவிக்கு இலக்கணமாய் போனதே

கவியில் முடிந்திடா எங்கள் அன்பும்...

கவிதை வார்த்தையில் முடிந்திடுமோ
கவிதை வார்த்தையில் திளைத்திடுமோ
கவிதை வார்த்தையில் நடனமிடுமோ - இல்லை

கவிதை வார்த்தையின்றி ஜொலித்திடும் அன்பினிலே...

தமிழே, கவிதையாய்...

அலையாய் அனுதினம் அவரோடு
அருவியாய் அன்பை பொழிய
அதுவே கருத்தாய் தொடுத்து
அமுதோடு தமிழாய் வந்ததோ
அன்பர்களின் மொழி கவிதையாய்...

தித்திக்கும் தமிழே திகைத்தாயோ
தித்திப்பான எங்கள் அன்பில்
திகட்டா மொழியில் குலைந்து

தினமும் மகிழ்வோம் நாங்களுமே
தில்லையில் திசைமாறா எங்கள் அன்புமே
தினுசாய் வருமே அருவியாய் கவிதையாய்....

 உள்ளோடு வைத்து உறவோடு வந்தது
உள்ளன்போடு திகைக்கிறோம் தினமும்
உவகையோடு செப்பியே மலைக்கிறோம்

உந்தன் மொழியில் எங்கள் அன்பை
உலகம் போற்றும் தமிழே, கவிதையாய்...

நிறம் மாறா வாசனை ரோஜாக்கள்
நித்தமும் மலரும் நித்தியமல்லி
நினைத்தே உருகுகிறோம் அன்பில்

நினைவாய் வருமே அருவியாய் களிப்புகள்
நிலையான மொழியில் செப்புகிறோம் கவிதையாய்...

Balachander, The Legend


வலியின் வேதனைகள்

வெட்டிவிட துடித்தாலும் 
வெந்து போன நினைவுகளை
வெட்கையால் ஆன நிழலினை 

வெளியிட துடிக்கிறதே உள் மனமும் வெளியே . 


வலியின் வேதனைகள் 
வலித்தவர் அறிவ ரோ ?

அற்புதமாகும் பெண்ணினம்

வீணை மீட்டுவோர் நோக்குவதில்லை
வீணையிசையிலும் மாற்றமில்லை
வீணையல்ல பெண் 

மீட்டுவோரெல்லாம் இசைத்திட...

இசைத்தோடி வரும் இசைந்தோடி
இயைந்து மீட்டினால் வீணையில்
இயல்பாய் பெண்ணும் அப்படியல்ல

இசைப்போர் இயைந்தாலும் இசைக்க
இணக்கமில்லையேல் பெண்ணில்
இருக்காது இயல் இசை....

வருடும் வசந்தமாய் இசை
வருவோரெல்லாம் இயற்றிட வீணையில்
வந்தோரெல்லாம் இசைத்திட

வருவதில்லை இசையும் பெண்ணில்...

அங்கமெல்லாம் தங்கமாக்கி
அசைவெல்லாம் இசையாக்கி
அசைந்தாடும் ஓசையில் 

அள்ளிப் பெருகத் துடித்திடும்
அந்த கயவர்கள் இல்லையேல்
அர்த்தமாகும் உலகம்
அற்புதமாகும் பெண்ணினம்....

ஓர் இலக்கணம் தான் பெண்......

ஓர் ஓவியம் சிலையாய்
ஓர் அற்புதம் உயிராய்
ஓர் ஆச்சரியம் உருவம்பெற்று

ஓர் உன்னதம் உடலிட்டு
ஓர் இலக்கணம் தான் பெண்......

உய்விப்பாயோ எனையும் நீயே நமசிவாயனே!!!

உதிரமது உள்ளிருந்து வேகமிட
உணர்வுகளும் நீராய் துடைத்திட
உடலுமது நீரிட்டு மின்னிட
உயிராய் இதயமது துடித்திட
உமையோனே உள்ளிருந்து ருத்ரமிட
உணராமல் மனமும் வாட
உளம் ஆசை பிறப்பு பெற்றிட
உனைத் தேடி வெளியில் தவித்திட
உன்னைச் சரணடைந்தேன் தொழுதிட
உன் நாமம் தினம் செப்பிட .
உனையன்றி வேறு துனை நாட
உய்யவில்லை மனமும் கூட
உன் பாதம் சரணடைந்து பணிந்திட
உடுக்கை நாதனே வெற்றி முரசிட
உய்விப்பாயோ எனையும் நீயே
நமசிவாயனே!!!

நீயும் நானும் ஒன்றோ

தோள் கொடுக்கும் தோழனே
தோயும் நெஞ்சை நெருடும் நேசனே
தோகை விரித்தாடும் தோழி இங்கிருக்க

தோன்றவில்லையோ சீராட்டி தாலாட்ட...

எங்கே போனாயோ என் தோழா
என்னை பாராமல் போனாயோ என் தோழா
எப்படித் தேடுவேன் என் தோழா

எண்ணமெல்லாம் உள்ளிருந்து என்னுள்ளே
எட்டாத தூரம் போனாயோ என் தோழா???

தோழா :

உன்னை மறப்பேனோ என் தோழி

உளமெல்லாம் நீக்கமற நிறைந்தவளே
உள்ளேயே நானிருக்க வெளியில் தேடலாமோ
உய்ய வழி தேடி தூரமிட்டேன்
உற்ற தோழியே! என் தமக்கையே
உண்மை இதுவென அறியாயோ?
நிழலும் நிஜமும் ஒன்றே
நித்தமும் நீங்கா உன் நினைவன்றோ
நிமிடமும் நொடியும் உன் நினைவில்
நீயும் நானும் ஒன்றோ -
ஓர் தமிழ் தாய் மக்களன்றோ

உறுதுணை யார் உளர் ஈசனே

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
உலகத்தோர் உலாவர வீதியிலே - உனையன்றி
உறுதுணை யார் உளர் ஈசனே
உன் தயவின்றி கரையேற்ற எனையுமே!!!
சொல்வைத்து சொல் பேசும் உலகில்
சொல்லில்லையே நாநயம் சித்தி பெற
சொல்லும் விலையானதோ சொல்லாமல் போனதால்
சொன்ன சொல் செல்லரித்துப் போனதோ!!!
உள் நாக்கில் சொல் வைத்து
உள்ளுக்குள்ளே நஞ்சும் சேர வைத்து
உள்ளேயே பற்றி எரிய நெருப்பாய்
உமிழும் வார்த்தையில் தேன் வைப்பரோ?
எள்ளி நகையாடும் எத்தர்கள் சூழ்ந்திட
எண்ணி எண்ணி நொந்து போகிறேன்
எட்டும் தொலைவில் எட்டாத கனவுகள்
எனை நிறுத்தி கடந்து சென்றதோ?
தட்டுத் தடுமாறி காலூன்றும் வேளையிலே
தடுக்கி வீழ்த்திடவோ தரம்கெட்ட மானுடர்
தந்திரம் பல செயது தாழ்த்திடுவர்
தள்ளாடும் வேளையிலே கறைச் சேர்த்திடுவரோ!!!
மதி கெட்ட மானுடர் நிலைபெற
மந்தி கூட்டமது புத்தி பெற
மற்றவரும் மானுடரெனச் சித்தி பெற
மங்கா ஈசனே உக்கிர நடனமிடு
நம்பி நம்பி நொந்து போனேன்
நம்பியதோர் குற்றமென உணர்ந்து போனேன்
நல்லதாய் உலகிற்கு நயம்பெற சொல்வாயோ
நலம் காக்கும் ஈசனே ருத்ரமிடு
பொய்யுரைக்கும் கயவர்களை வீழ்த்தி விடு
பொல்லா உலகில் மாயமதை கலைத்து விடு
பொங்கியெழு பொசுங்கட்டும் தீதுகள் தீயிலிடு
பொன்னார் மேனியனே உடனே ருத்ரமிடு....
உனை நாடி பாடுகிறேன் நானுமே
உற்றத் துணையே உளமெல்லாம் நீயே
உய்விக்க வருவாயோ உள்ளொளியாக
உந்தன் பாதம் பணிகிறேன் நமசிவாயனே!!!!

சில நேரங்களில்

தொலை தொடர்பு 
அலைக் கற்றைகளில் 
தொலைந்து போகிறது

உறவுகளின் உன்னதங்கள்....

ஆசை வார்த்தைகள்
அழகு அழகாய் அலங்கரித்து
அன்பு உறவுகளை
காந்த அலைகளில் 
அவசரமாய் அலங்கரித்த வரிகள்
அன்பெனும் போர்வையில் 
அழகாய் ஒளிந்து கொள்ள
அலை பேசி தொலை தூரமிடுகிறது
அழைப்புகள் எடுக்கப்பட்டும்
சில நேரங்களில்...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

ஆழ்மனதில் ஆர்பரிக்கும்
ஆழமில்லாமல் ஆச்சரியமிடும்
ஆசையோடு உணர்ந்திட்டால்

ஆவலோடு உளமாடும்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

எல்லைக் கோடுகள்

எல்லைக் கோடுகள் 
முற்றுப் புள்ளியின்
தொடக்க வரிகள்

முடிவில்லா பயணத்தின் 
காணல் நீர்கள்..

எதற்கும் முடிவில்லை
எதுவும் முடியாததில்லை
இதுவே முரண்
இயற்கையின் விதி,,,,

அசைந்தாடும் காற்றில்

அசைந்தாடும் காற்றில்
அலைமோதும் நினைவுகள்
அழையா விருந்தாளியாய்

அல்லல்படுத்தும் ஊடல்கள்
அன்பே! நீ காற்றாய் வந்து
அரவணைத்துக் கொள்வாயோ?

உள் மூச்சில் உள் வந்து
உள்ளேயே நீ படுத்துகிறாய்
உளம் நீயன்றி படும்பாட்டாய்
வெளி மூச்சு சொல்லிடுமே
நம் சுவாசம் காற்றல்ல, வாழ்வென

ஓர் தமையனின் தாலாட்டுப் பாடல்...

சொட்ட சொட்ட நனைந்திட்டேன்
சொட்டும் விழியில் விழுந்திட்டேன்
சொட்டாமல் புன்னகையோ இதழோரம்
சொட்டும் அன்புரசத்தில் மகிழ்ந்திட்டேன்
சொல்லவோ அவளன்பை கவிசுவையாக
சொல்லினிக்கும் தமிழ் அமுதோடு....
மஞ்சள் வெயில் கிறங்கடிக்க
மதிமயக்கும் மாலையிலே
மண்வாசம் அடித்ததோ
மங்கையவள் தமையன் அவன்
மங்கா ஒளிவீசி வந்தானோ..
தமக்கையோ காத்திருக்க
தனியே பார்த்திருக்க
தமையனவன் வந்தானோ
தங்கையை தாலாட்டி சீராட்ட...
கண் உறங்கு கயல்விழியே
கண் இருட்டி வெளி இருண்டு
கருமை நிறமானதோ வெண்மேகம்
கண்மணியே கண் உறங்கு..
வெளியோடும் மேகமதில் முழுமதி
வெளியே வந்துதித்து உனை காண
வெட்கத்தில் நாணமிட்டு வெட்டவெளியில்
வெள்ளியது மேகவீதியிலோட
வெண்பட்டே அமுதே கண் உறங்கு...
கார்மேகம் கருத்ததோ
கார்முகில் நிறைந்ததோ
காலம் கனியட்டும் நிறைவோடு...
கதிரவன் ஒளிவீச வருவானே
கண்மணியே கண் உறங்கு முன்னே...
வெள்ளியதில் ஓர் பாட்டி
வெள்ளை நிற ஆடையுடுத்தி - பருப்பு
வெந்த வடை செய்தாளோ
வெள்ளந்தியாய் கதை கேட்டவளே
வெள்ளி மறைந்துவிடும்
கண்மணியே கண் உறங்கு...
காலை முதல் மாலை வரை
காட்சியாய் பல வந்து போக
கண் காட்சி திரையாகி
கட கடவென பட்டியலிட்டு
கண் அயரா செய்திடுமே
கண்மணியே கலங்காதே
காத்திடுவேன் தமையன் நானே
கண் உறங்கு...
கண் அயரும் நேரத்திலே
கனவாய் திகில் கொண்டு
கலைத்திடுமோ உன் பயமே
கலங்காதே துணை வருவேன் நானுமே...
களைத்திட்ட உன் உடல்
களைப்பைத் தேட
கலைந்த கனவில் நொந்து
கண் அயர துடித்திடுவாய்
கண்மணியே கலங்காதே
கனவிலும் நினைவிலும் உறுதுணையாய்
கடைசிவரை நான் வருவேன்
கடைசிக்குப் பிறகும் நான் வருவேன்
கண்மணியே கண் உறங்கு...
தாலாட்டிச் சீராட்ட நானிருக்க
தமக்கையே ஏன் தயக்கம்
தாமதியாமல் கண் அயர்ந்து
தாழ்த்தாமல் நீ உறங்கு...
நீ உறங்கு நீ உறங்கு
நீளட்டும் இரவு இன்று மட்டும்
நீங்கட்டும் உன் கவலையெல்லாம்
நீக்கமற நிறையட்டும் மகிழ்ச்சியுனக்கு
நீவீர் உறங்க நானுனக்கு பாடுகிறேன் தாலாட்டு....

வாட்டும் முதுமை வந்ததோ,...

வாட்டும் முதுமை வந்ததோ?...
இரண்டற கலந்தன உயிர்கள்
இனிதாய் ஓர் உயிரின் ஜனனம்
இல்லறத்தின் பரிசாய் வந்துதித்தாய்
இன்பத்தின் விளைவான இன்பமே..
அழகாய் வந்துதித்து குழந்தையானாய்
அறுவயது வரை தாய் சேயானாய்
அன்பில் வளர்ந்து அறிந்து கொண்டாய்
அன்னையும் அப்பனையும் உறவையும் உற்றாரையும்...
அகவை வளர அறிவு வளர்ந்ததோ
அந்த ஓருயிர் அண்டத்தின் வாழ்வுதனை
அச்சமின்றி கடந்திட அன்பாய் பயின்றதோ
அழியா செல்வம் கல்வி தனை...
ஆசான் உரைக்க எழுத்தறிவினை
ஆர்வமாய் கற்றதோர் குழந்தை
ஆண்டு உருண்டோட அகவை யும்
ஆனதோ குழந்தையும் பதினெட்டு...
கல்வியறை தந்ததோர் பாடம்
கடந்து வந்த நாட்களோர் பாடம்
கடந்தோர் சொல்லித் தந்த பாடம்
கடக்க துணிந்ததோர் பாடம்
கற்பனையில் வாழத் துடித்ததோர் பாடம்...
கட்டளையாய் சொன்னதை தான் படித்து
கடமைக்கு கற்பித்ததை தானும் படித்து
கலியுக நிர்பந்தமென மற்றதை படித்து
கற்றவையும் கல்லாததையும் தெரியாமல் படித்து..
இப்படியாய் இளமை கல்வி கடக்க
இவ்வுலகில் தோணி தனை கரைசேர்க்க
இச்சை எதுவாகினும் வந்ததோர் தொழில் ஏற்று
இன்பமும் துன்பமும் மெருகேற்ற
இளமை உருண்டோடியது அலுவல் துணையோடு...
இல்லறமே நல்லறமென துணை தேடி
இல்வாழ்க்கை தொடங்கியதோ ஓருயிரோடு
இரு உயிர் கலந்து மறுபடியும்
இன்னோர் உயிர் ஜனித்திட சக்கரமாய்...
வயதொன்று கூட வாலிபம் மறைய
வயதொத்த பிணிகள் ஒவ்வொன்றாய்
வந்து உடல் தனை தாக்க
வருந்தா மனமும் வலுவிழக்க....
நாற்பது வயதில் நாளொரு தேசம்
நாயாய் அலைந்து பணமென நினைத்து
நாதனை மறந்து நாளும் உழைத்து
நாராய் கிழிந்து உடல் தளர்ந்து...
நாதிக்கு வழி தேடி நயமாய்
நாறும் உலகில் மனையும் குடிலும்
நாட்டார் வாய்பிளக்க தினுசாய் அமைத்து
நான் எனும் அகந்தை வளர்த்து...
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
நான் தான் என வளர்ந்து
நாம் நிரந்தரமென ஆசைகொண்டு
நாறும் உடலில் பற்று கொண்டு...
அழகாய் உருமாற்றி அதற்கோர் பெயரிட்டு
அன்பாய் உற்றார் உறவிட்டு
அனுதினம் ஆசை தீயை வளரவிட்டு
அங்கம் தங்கமென ஜொலிக்க விட்டு
அட்சரம் பிறழாமல் பொய்யுரைத்து
அடங்கா மனம் கொண்டு வாழ்ந்து
அகவை அறுபது வந்து
அலை அலையாய் வாழ்வுகடந்து...
முன்னுழைத்த உடல் தளர்ந்து
முடி நரைத்து கூன் வந்து
முதுகு தண்டு தளர்ந்து
முட்டியும் சோர்ந்திட ...
மனம் அன்று போல் இன்றும்
மயங்கும் மயக்கும் சொல்லும்
மறவா நினைவுகள் தொடர
மறையும் அழகு மறைய
வாடி வதங்கின சதைகள்
வரிவரியாய் கோடிட்டன முகம்
வறண்ட தோல் வலுவிழக்க
வாய் குளறி வரி மறந்து
வந்த சொல் வலுவிழந்து
வரும் சொல் வரமறுத்து
வார்த்தை தடுமாறி உளறி
வாய் தடுமாறி மூச்சுமிழந்து
கண் பார்த்த காட்சி கரைய
கண்டிட்ட காட்சியெல்லாம் மங்க
கண் இமை திறவாமல்
கண்ணாலே காண இயலாமல்
வாய் கொண்டு அழைத்தவரை
வாய் திறந்தும் வார்த்தையின்றி
வா என கையழைக்க
வாராது என நினைத்த
வாடா இளமை முடிந்து
வாட்டும் முதுமை வந்ததோ,...

சிரிக்கிறதோ பொம்மை

சிரிக்கிறதோ பொம்மை வாய்திறந்து
சிந்திக்க வைக்கிறதோ நாள்தோறும்
சிரிப்பில் ஒளிந்திருக்கும் உண்மையின் உறைவிடம்

சிரிப்பே சொல்லிவிடு, 
உன் பொருள் தான் யாதோ?

சிரித்தாயோ வார்த்தையின் கோலத்தில்
சிரித்தாயோ வார்த்தையின் வேகத்தில்
சிரித்தாயோ வரிகளுள் ஓளிந்து
சிரித்தாயோ தமிழின் நிலையெண்ணி

சிரிக்காமல் சொல்லிவிடு
சிந்திக்கிறேன் இனி தரமாக...

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...