Saturday 6 August 2011

காதல் ஏக்கம்???? - என் கனவுக் காதலே!!!!

1.    மனமெல்லாம் லயித்து
       மனதோடு பயணித்து
       மனதாக இருந்து - என்
       மனதில் மட்டும் இருக்கிறாய்
       ஏக்கமாய் உனைப் பார்க்கிறேன்
       ஏங்கி ஏங்கி வாழ்கிறேன்
       ஏன்?????


2.    உள்ளொன்று வைத்து
       உள்ளத்தில் வழியோடி
       உள்ளத்திலே குடியிருந்தாய் - என்
       உள்ளமே போதுமென
       வெளியில் எங்கோ சென்றாயே
       உடலால் வேறுபட்டாலும்
       உயிரால் ஒன்றுப்பட்டோம் - என்
       உள்ளத்தின் உறவே
       ஏக்கமுடன் நான்..


3.    உள்ளம் ஏங்கியிருக்க
       உயிரோடு காத்திருக்க
       உணர்வோடு போராடி
       உருண்டோடுகிறது காலமும்
       உள்ளத்தின் விளக்கே
       உயிரூட்ட வருவாயோ
       உன்னதமாய் உள்ளிருந்து.

அய்யோ????


1.   விட்டு விட்டு போன ஒன்று
      விடுகதையாய் ஆன ஒன்று
      விடைத் தேடி வருமென்று
      வினாவோடு காத்திருந்தேன்
      "அய்யோ" வென வந்து
      அரியாச் சுவடியானது.....


2.   வாய் வரை வந்தது
      வார்த்தையாகிப் போகாமல்
      வாராமல் போனது
      "அய்யோ" என சொன்னது - அது
      வரிகளுள் ஒளிந்து
      அச்சேறிப் போனது...


3.   வார்த்தை சொல்ல வந்தேன்
      வாக்கியமாய் ஆகாததை...
      "அய்யோ" வரவில்லையே என்றேன்
      அதுவே வார்த்தையானது
      வரிகளின் வரைப்படத்திற்கு
      வலிமைச் சேர்த்து கவிதையானது..
  

4.    காத்திருந்து காத்திருந்து
       காலம் போகும் வரை பார்த்திருந்து
       காணாமல் போனதோ - நான்
       காண வந்தது - இல்லை
       காணல் காட்சியாய் போனதோ
       "அய்யோ" "அய்யய்யோ"....

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...