1. நான் எனும் வார்த்தை
நாவில் வரும் போது
நாம் மறக்கிறது
நிலை தடுமாறும்
உறவுகள் உருமாறும்...
மன்னித்து மறந்தால்
மறந்து மன்னித்தாலும்
மறுக்காமல் ஏற்கும்
மனம் உறவுகளை
மகிழ்ச்சியின் தொடக்கமாய்...
2. உள்ளம் ஒரு மாயை
உயிர் என்றும்
உடல் என்றும்
உறவுகளைச் சுமந்து
உன்னதங்களை உறையிலிடுகிறது - போலி
உடலினை "நான்" எனப் பெயரிட்டு...
உயிரான உறவுகளுக்கு
உடலான உயிர்ப்புகளுக்கு
உருமாறும் "நான்" மறந்து
உறையிலிடும் தவறு மறந்து
உறவிடுவோம் உறவுகளுக்கு..
3. மனம் ஓர் மந்திரச்சாவி
மறுதலிக்கும் அன்பர்களுக்கு
மறுக்கும் சிலருக்கு
மருவி, மறந்து
மன்னிக்கும் பலருக்கு
மன்னித்தலில் மருந்திட்டு
மகிழ்விக்கும் உறவுகளை
மறந்திடுவோம் "நான்" எனும் அகந்தையினை...
4. நான் செய்த தவறு
நானே செய்தது
நான் மறந்து செய்தாலும்
நான் தெரிந்து செய்தாலும்
நானன்றி வேறில்லை
நான் என்று செய்தது
நானே கேட்கிறேன் - இல்லை
நாவடக்கி கேட்கிறேன்
நாமவோம் உறவாக....
5. உரசிப் போனது மனதினை
உரசிலிடத் துனிந்தது
உறவறுக்க துடித்தது
உயிர்ப்புகளைத் துண்டிக்க
உரிமையோடு போராடியது
உடலான "நான்"
உதறிடுவீர் அகந்தையினை
உயிரிடுவீர் உறவுகளுக்கு
உரிமையாய் மன்னிப்பிட்டு...
6. யார் சரியென்று
யார் மதிப்பிட்டாலும்
யாரும் சரியில்லை
யாரென்ற எ(அ)வருக்கும் - ஆதலால்
யார் என்பதை மறந்து
யாது என்பதையும் மறந்து
யாரானாலும் மன்னிப்போம், மறப்போம்
யாரையும் உறவாக்கி
யாரான உறவுகளையும் மதிப்பிட்டு...
7. சரி யென்ற ஒருவருக்கு
சரியல்ல மற்றவருக்கு
சரியென்பது பொதுவிதியல்ல
சரியாய் போவதற்கு
சரி விடுயென்று போய்விட்டால்
சரியாய் போய்விடும்
சரியாய்விடும் சங்கதியும்
சரியாய் மன்னித்து மறந்தால்
சரியான உறவுகளை மதிப்பிட்டு....
8. குற்றம் பார்த்து
குறைகளையேப் பட்டியலிட்டு
குறையிட்டு நிறைகளை
குற்றமிட்டு காத்திருந்தால்
குறைந்துவிடும் உறவுகளும் - ஆதலால்
குறைகளை களைந்துவிட்டு
குறையான "நான்" மறந்து
குறைந்து பார்க்காமல் நிறைந்து நோக்கின்
குறையில்லை எதுவுமே....
9. உறவுகளை மதிப்பிட்டு
உண்மையானாலும் தவறுகளை
உரிமையோடு மறந்து
உயிர் கொடுக்கிறேன் உறவுகளுக்கு
உறுத்தும் எண்ணங்களை
உயிரோடு புதைத்துவிட்டு
உளமார மன்னிப்பிட்டு...
No comments:
Post a Comment