Tuesday 27 September 2011

அண்ணலே நீர் செய்த குற்றம்



அண்ணலே நீர் செய்த குற்றங்களை
அடுக்கி அடுக்கிப் பட்டியலிட்டால்
அந்த நொடிக்கு ஒரு முறை
அசராமல் தூக்கிலிட வேண்டும்
அந்த சுதந்திரம் எது என
அறிய உணர்த்தாமல் விட்டமையால்....


அண்ணலே நீர் செய்த முதற் குற்றம்


வெள்ளையனை வெளியேற்றி
வெளிச்சமிட்ட தியாகிகள்
வெட்கமிடும் வேதனை - அய்யகோ அய்யனே
மௌனமாய் நீர் பெற்ற சுதந்திரம்
மௌனமாய் கொல்கிறதே....
லஞ்சம் தஞ்சமடையாமல்
சீரான நிர்வாகம்
சீரோடு சென்றதே - வெள்ளை
சீமான்கள் மட்டும் கொள்ளையிட்ட போதிலும் - இன்றோ
சுதந்திரம் கொண்டாட கூட இனிப்பு கொடுத்து.
விடியாதோ சுதந்திரம் - ஆம்
இது ஒரு சுதந்திர நாள்.


அண்ணலே நீர் செய்த இரண்டாம்  குற்றம்
பன்னாட்டுப்  பரிமாற்றம்
பல நாடு வர்த்தகம்
பாவம் தியாகிகள் - அன்று
பக்குவமாய் கழட்டி விட்டது - இன்று
பரதேசி கூட சுதேசி இல்லை....

வெள்ளையரின் வாழ்வியலில்
வெழுத்ததெல்லாம் பால் என
வெட்கமின்றி பின் தொடரும் இந்தியர்கள்
வெட்ட வெளியில் அரையாடை மனிதர்கள்
வீதிக்கொரு கிளப் – கூடி
விளையாடி மகிழ பப் – அய்யகோ
விடியாதோ சுதந்திரம் - ஆம்
இது ஒரு சுதந்திர நாள்.


அண்ணலே நீர் செய்த மூன்றாம் குற்றம்
மது ஒழிக்கப் போராடி
மாதுக்களின் வலிமையால்
மரமேறி கள்ளோடு நிறுத்தியவன்
மகாத்மாவே நீர் பெற்ற சுதந்திரத்தால் – இன்றோ
மானுடம் காக்கும் அரசே
மது வியபாரியாய் – அய்யகோ
வீதிக்கொன்று விலாசமாய்
வீடுகளில் இருந்தவன்
வீதிகளில் படுத்துப் புரளும் அவலங்கள்
விடியாதோ சுதந்திரம் - ஆம்
இது ஒரு சுதந்திர நாள்.



அண்ணலே நீர் செய்த நான்காம் குற்றம்

வேலையில்லா திண்டாட்டம்
வேலையில்லாமல் போயிருக்கும்
வெள்ளையனின் பேரால்
ஒருங்கிணைந்த இந்தியா வல்லரசாயிருக்கும்
விலாசம் பெற்றிருக்கும்
மறவாமல் ஐநாவில்....


அண்ணலே
அவசரம் எதற்காக
திருவோடு ஏந்தி திரியட்டும் என்பதற்கா – இல்லை
தினம் தினம் ஏங்கித் திரிவதற்கா.
விடியாதோ சுதந்திரம் - ஆம்
இது ஒரு சுதந்திர நாள்.

அண்ணலே
நீர் சினம் பெற மாட்டீர் எனில்
தேவையா சுதந்திரம்...

பிரிட்டனைப் பிரித்த நீர்
பிரிட்டனால் பெற்றமையை
பிரிக்காமல் விட்டாயோ – இல்லை
பிரிட்டன் மறுபடியும்
பிடிக்கட்டும் என விட்டாயோ.
ஒழுக்கமற்ற இந்தியர்கள் சிலரால்.
விடியாதோ சுதந்திரம் - ஆம்
இது ஒரு சுதந்திர நாள்.

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...