Tuesday, 27 September 2011

சுமைகள்



1.  சுமக்க மறுத்த தருணங்கள்
     சுமந்திருந்த நினைவுகளோடு
     சுமந்த சுகத்தில்
     சுவையாய் அசைபோடுகிறது மனதில்
     சுவருக்கு வெளியே செல்லாமல்
     சுமைகளாய் நெஞ்சினுள்ளே!!!!


2.  சுடு பட்ட வலியொன்று
     சுடாமல் சுடுகிறது
     சுட்டது வார்த்தையாய்
     சுமையாய் நெஞ்சில் படிகிறது...


3.    ஆறாத வடுவொன்று
      ஆறும் கனவோடு
      ஆறாத நெஞ்சத்தில்
      ஆசையாய் பார்த்திருக்க
      ஆறாதோ சுமைகள்
      ஆறி வடியாதோ - ஆம்
       அழும் கண்ணீரோடு...


4.  அழுது அழுது பார்த்திருந்தேன்
     அழும் மட்டும் காத்திருந்தேன்
     அழுகிவிடும் சுமைகளென்று
     அழுகையாய் வெளியேற
     அழுது கொண்டே துடைக்கிறேன்
     அழுத கண்ணீரை 
     அழும் கண்களில் - இனி
     அழுகாமல் காத்திருக்க...


5.  அழுவது அற்பத்தனம்
     அழுவது கோழைத்தனம்
     அழுவது ஏமாற்றம்
     அழுவது ஓர் ஒத்திகை - என
     அழுது கொண்டே ஆறுதலிடுகிறேன்
     அழும் கண்களில்
     அழுதோடும் சுமைகளைப் பார்த்து....


6.    உயிரின் உயிரே
     உயிரற்ற ஜடமானாலும்
     உருவமற்ற உடலானாலும்
     உனக்காகவே துடிக்கும் - என்
     உள்ளிருந்து சுமக்கும் - நீ
     உதறிவிட்ட போதும்
     உன்னதமாய் சுமைதனை
     உள்ளார்ந்து சுகமான சுமைகளாய்....


7.    உள்ளம் கொதித்தாலும்
     உறங்க மறுத்தாலும்
     உள்ளிருந்து வாடினாலும் - என்
     உலகான உள்ளமே
     உயிர்ப்பாய் உயிர்ப்பிக்கும் - நம்
     சுகமான சுமைகள்....


8. இத்தனை நாளாய் - நம்
    இஷ்டப்படி இருந்தது
    இருவருக்கும் பொதுவாய்
    இருக்கும் இடத்திலிருந்து
    இம்சையாய் வாட்டுகிறது
    இதயத்தில் சுமையாய்
    இன்று....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...