Thursday, 20 August 2015

விதையொன்று விருட்சமாகிறது...

விதையொன்று விருட்சமாகிறது...
பாகம் - 1
புரட்சியில் மிளிர்ந்தது பாரதம் 
புன்னகை தவழ வந்துதித்தான்
புவிக்கு வந்ததோ அமைதியாக
புதுமையின் வித்தகனே, புன்சிரிப்பின் நாயகனே
கனவே கலையாதே, விதையொன்று விருட்சமாக...
அன்றோ வெள்ளையன் ஆள
அடிமை இந்தியன் உதித்தெழுந்தான்
அனல் பறக்கும் சூரியக் கதிர்கள்
அஃனி சிறகாய் அன்பர்கள் நெஞ்சிலே...
கனவே கலையாதே, விதையொன்று விருட்சமாக...
வறுமையோ ஓர்புறம் வாழ்க்கையில்
வறுமைக்கு மணியடித்து வாழ்ந்ததோர் காலம்
வண்ணமய கல்லூரி காலமில்லை
வந்த நோக்கம் செவ்வனே பயணித்தமையால்...
கனவே கலையாதே, விதையொன்று விருட்சமாக...
உறவாய இந்தியாவை ஏற்றமையால்
உறவுக்கு ஓர் உயிர் தேவையில்லை என
உற்ற தோழியென சொல்லும் மனைவியினை
உறவுகொள்ளாமல் விட்டனரோ நாட்டுக்காக...
கனவே கலையாதே, விதையொன்று விருட்சமாக...
சித்தர் அவர் சிந்தையிலே
சிந்திக்கும் முத்தெல்லாம் துளிர்ந்ததோ
சிறகாய் விஞ்ஞான வளர்ச்சியிலே
சிந்தனை சிற்பியே நீ எங்கே போனாயோ?
கனவே கலையாதே, விதையொன்று விருட்சமாக..

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...