Thursday 20 August 2015

விதையொன்று விருட்சமாகிறது பாகம் - 2

விதையொன்று விருட்சமாகிறது
பாகம் - 2
விஞ்ஞானத்தால் அஞ்ஞானம் அகற்றினாய்
விந்தை பல புரிந்தாய் விண்ணில்
வித்தகன் இவன் என பார் புகழ
வித்திட்டாய் விதைகள் விருட்சமாக
கனவே கலையாதே, விதையொன்று விருட்சமாகிறது
இனியொருவன் இல்லையென நீ வந்துதித்தாய்
இந்தியாவின் கடைகோடியில் ஏழையொருவனாய்
இச்சகத்தில் உன்னைப் போல் பலர் பிறந்தும்
இன்முகம் கொள்ளாமல் இருண்டனரோ வறுமையில்
கனவே கலையாதே, விதையொன்று விருட்சமாகிறது
ஈதலில் இன்பமுற்றாய் பார் உயர
ஈட்டிய கல்வியினை கற்பித்து உயர
ஈகை கொண்டாய் இச்சிறாரிடம்
ஈந்தோர் புகழடைய செம்மை கொண்டாய்
கனவே கலையாதே, விதையொன்று விருட்சமாகிறது...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...