Thursday, 20 August 2015

சகியே!!!

சகியே உளம் நுழைந்தாய்
சகித்து எனை நீ புரிய
சகலமும் நொடியில் தெரிந்தாய்...


அழுதே ஆர்பரிக்கும் மனம்
அழையாமல் நீ வந்து
அலை மோதும் எண்ணம்
அள்ளிச் செல்வாய் நொடியிலே..

நீ தாங்குவதால் நான் பயணிக்கிறேன்
நீ தூரமிடுவதால் துன்பத்தையும் ரசிக்கிறேன்
நீ எங்கே போவாயோ....

சொல்லாமல் சொன்னாயே அன்பே
சொல்லும் வார்த்தையெல்லாம் நீயானாய்
சொல்லுக்குள் ஓளிந்து சிறையிலிட்டாய்

சொல்வாயோ நீ எங்கே போவாயோ?

சகியே!
உன்னுள் தொலைந்து எனைத் தேடுகிறேன்
உன்னைத் தொலைக்காமல் காத்திட
உன்னுள்ளே உறைகிறேன் என் அன்பே
உன்னை விட்டு எங்கே போவேனோ?

யார் தேடும் பயணம் இது
யாரும் தேடா உலகம் நீ
யாருக்கும் கிடைத்திடா அற்புதம் நீ

யாரும் கொண்டாடும் தோழமையே...

உன்னோடு சிரிக்கிறேன் உனக்காக
உன்னோடு அழுகிறேன் எனக்காக
உன்னோடு சுவாசிக்கிறேன் உயிரே
உன்னோடு பயணிக்கிறேன் என் சகியே...

நீ உதிரமோடு பயணிக்கிறாய்
நீ உணர்வுகளோடு சுவாசிக்கிறாய்
நீ உரிமையோடு நடையிடுகிறாய்

நீயும் நானும் வேறோ
நீயே நான் ஆன போது சகியே

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...