Tuesday, 16 August 2016

கவிஞர் நா. முத்துகுமார்....14/08/2016

ஓர் கவிதையின்
புனித நிரந்தர பயணம்
சென்று வா தமிழே...
இலக்கணத்தின் நீண்ட பயணம்
இறுதியில் இயற்கை உரைத்த
பாடம்
இனியும் காலம் வருமோ
இனியவனின் பாடல் வரிகள்
இனிதாய் காதோரம் இசைக்க...
விழி மூடிப் பார்க்கிறேன்
விடியாத இரவுகள் சிரித்தப்படி
விரியும் உன் வரிகளில்
விடியாமல் ரசித்தேப் போகிறதோ..
நண்பா!!!
தமிழின் சாபம் இது...
வானில் கேட்கலாம்
இடியும் மின்னலும்
இனி உன் வரிகளில்
எம்மைத் தழுவலாம்....
நினைத்துப் பார்க்கிறேன்
நீயில்லாத தமிழினை
முடியவில்லையே.......
முற்றுப்பெறாத முற்றுப்புள்ளி
முடியாத உன் வரிகள்
முடியாத கனவு நாயகனே....
கண்ணதாசன் சொல்லியது போல்
"எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை""" - ஆம்
நீ வரிகளில் வாழபோகிறாய்
உடல் துறந்து
உணர்வுகளில் இனிமேல்...
நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்
நினைவில் நின்று கேட்கிறேன்
நீயிட்ட வரிகள் ரீங்காரமாய்
-----
சாவே!!!!
போதும் உன் பசி...
-----
நீயில்லாத திரையுலகம்
நீயில்லா இசை
நினைத்துப் பார்க்கிறேன்
அலையற்ற கடல் போல
அன்னையற்ற சிசு போல....
-----
வரிகளில் உறவானவனே
வரிகளில் உணர்வானவனே
வரி வரியாய் கொல்கிறதே
வந்து விடு எனக்காக
வசதியாய் தருகிறேன்
என் உயிரை....
------

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...