Tuesday 16 August 2016

இங்கே எனக்காக என்னுயிரே????

எங்கே யுமில்லாத காணாத காதலை
என்னைத் தேடும் உலகில்
உன்னைத் தேடும் ஜீவன் நான்
என்னுள் உன்னைத் தேடி தேடி
உன்னுள் நானே தொலைகிறேன்...
வந்தாயோ என் அருகில் நீ
தந்தாயோ உன் வாசம் தான்
வந்தாயோ கனவில் தான்
தந்தாயோ உன் நினைவும் தான்…
சிந்தையில் உனை நினைத்து
விந்தையில் லயிக்கிறேன் உயிரே
சிந்தையாய் வந்தாயோ தந்தாயோ
விந்தையாய் என் உயிரானாயோ….
காதலற்ற ஒரூயிர் நான்
காத்திருக்கும் காதல் பறவையானேன்
காதலாய் வருவாய் என
காத்திருக்கும் தூர தேசன் நான்…
மூச்சாய் இருப்பவளோ நீயென
முயற்சிக்கிறேன் முடியாத காதலை
மூச்சாய் நீயிருந்து பயணிக்க
முயற்சி திருவினையாகுமோ….
எங்கே நீயென வினாவோடு விடைக்காக
இங்கே நீவருவாயோ தருவாயோ
எங்கே யுமில்லாத காணாத காதலை
இங்கே எனக்காக என்னுயிரே????

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...