Sunday, 3 May 2020

கொரோனாவும் பொருளாதாரமும்


எத்தனையோ நாம் கடந்து வந்து விட்டோம், கடந்த 100 ஆண்டுகளில் நாம் கடந்து வந்த பாதைகளை நோக்கினால், நிச்சயமாக பிளேக் என்னும் கொள்ளை நோய்க்குப் பிறகு, உலகம் பல மடங்கு மாறியது, பஞ்சம் என்னும் கொடுமை கடந்து வந்த போது கூட அச்சப்படாத சமூகம், பிளேக் வந்த போதும், ப்ளு வந்தபோதும் ஆடி போனது. கிட்டத்திட்ட அன்றைய தேதியில் இருந்த மக்கள் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினை இழந்தோம். நாம் எண்ணி பார்க்க முடியாத முன்னேற்றத்தில் தான் இருந்த சமூகமும், மருத்துவமும். ஆனால் அதையெல்லாம் பல விலைக் கொடுத்திருந்தாலும், கடந்து வெற்றி நடையிட்டோம், அதன் பிறகு இரண்டாம் உலகப் போர், இந்தியாவின் விடுதலை, பல் வேறு விதமான பொருளாதார சீர்திருத்தங்கள் என நடையிட்டுக் கொண்டிருந்த போது, 1991ம் வருடம் எடுத்த உலகப்பொருளாதாரம் கொள்கையும் அதன் தாக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த உலகைப் புரட்டிப் போட்டது. விஞ்ஞான வளர்ச்சியும், தொழில் நுட்ப புரட்சியும் பெரும் அளவில் உலகை சுருக்கின. எதுவும் எட்டக் கூடிய தூரத்தில் வந்தது. நாம் அமைதியாக ஒரு புரட்சி செய்து கொண்டிருக்க, நம்மில் ஒருசிலர் இந்த உலகை ஆட்டிப் படைக்க வேறு ஒரு விதமான புரட்சியினை முன்னெடுத்துக் கொண்டிருந்தனர்.. அது தான் ஆராய்ச்சி எனும் பெயரில் பல்வேறு விதமான தாக்கங்கள். அணு ஆயுதங்கள், பல்வேறு கிலோமீட்டர் அளவு கூட நாசப்படுத்துமளவிற்கு ஆயுதங்கள், தயாரிப்பதிலும் வெறி கொண்டு வேலை செய்து வந்தனர்.
உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள், வல்லரசுகளையும் சேர்த்து , தங்கள் ஆண்டு பட்ஜெட்டில் கிட்டத்திட்ட 30% அளவிற்கு பாதுகாப்பு, ராணுவம் மற்றும் ராணுவதளவாடங்களுக்கு செலவு செய்தன.

நாம் நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டு செய்த செயல்களினால் நாம் உடனடியாக எதிர்வினைகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறோம். யாரை குற்றம் சொல்வது என்பதில் இந்த பதிவு இல்லை. யாரையும் குற்றம் சொல்ல இது நேரமும் அல்ல. ஆனால் நாம் பொருளாதாரத்தைப் பற்றி பேசும் பொழுது, நிச்சயமாக இதை உணர்ந்து தான் பேச வேண்டும். இந்த வைரஸ் தாக்கத்திற்கு முன்னரே நாம் மிகவும் மந்தமான நிலையில் தான் பயணித்துக்கொண்டிருந்தோம். இந்த வைரஸ் வந்து உலகளவில் பெரும் சேதத்தினை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

சரி எந்த எந்த துறை உடனடியாக வெற்றி பெறும், எந்த துறையெல்லாம் நாம் பயணிக்க ஏதுவாக இருக்கும் என்று பார்த்தோமேயானால், உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்கள், ஆடை மற்றும் ஆடம்பரமல்லாத அத்தியாவசிய ஆடை வகைகள், மருத்துவம், மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் ஆகிய துறைகள் இப்போதும், இதன் பிறகும் உடனே நமக்கு பொருளாதார வளர்ச்சியில் கை கொடுக்கும்.
மக்களின் சிந்தனை மாறியிருக்கிறது. மாறும். ஏனென்றால், நடுத்தரமும், உயர் நடுத்தரமும், உயர் வர்க்கமும் கூட தங்களின் அன்றாட தேவைகளில் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இது நெடும் கால திட்டமிடலுக்கு வழி வகுக்கும். ஆதலால் எதிர்கால திட்டமிடல் வைத்திருந்தால் இந்த துறை சார்ந்து பயணியுங்கள். வெற்றி நிச்சயம்.

அடுத்த இரண்டாவது துறைகள் என்று பார்த்தோமேயானால்
தற்காலிக சேமிப்பு, நிரந்தர சேமிப்பு, சிறு மற்றும் குறு தொழில்கள் ஆகியவை மீது மக்களுக்கு கவனம் செல்லும். இந்த நேரம் அவர்களின் அஸ்திவாரத்தினை ஆட்டிப்பார்த்ததால், அவர்கள் இதை நோக்கி தான் பயணம் செய்ய தூண்டும். சேமிப்பு என்பது நகையாகவோ அல்லது Mutual Fund, SIP, SEP, Etc ஆகியவற்றில் கூட இருக்கலாம். இவை அனைத்தும் நடுத்தர, உயர் நடுத்தர மற்றும் உயர் குடும்பங்களுக்கான எண்ணங்களாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கணிப்பு. ஆகவே இதை சார்ந்த துறைகளில் உங்கள் எதிர்கால திட்டமிடல் இருந்தால் வெற்றி பெறலாம்.

ரியல் எஸ்டேட் துறை உடனடியாக ஏற்றம் பெறும் நிலையில் இல்லை, என்ன தான் அரசு போராடி அதை தூக்கி நிலை நிறுத்த முயன்றாலும், அதில் உடனடியாக மாற்றம் இருக்கப்போவதில்லை. சரி விலை குறையுமோ, விற்று விடலாமா என்று எல்லாம் உங்களை குழப்பி கொள்ளாதீர்கள். மிகப்பெரிய வீழ்ச்சியினை எதிர் கொண்டாலும் அது எல்லாம் தற்காலிகமே. வருந்த வேண்டாம். அதிக பட்சம் 6-12 மாதங்களில் இந்த துறை இப்படி தான் இருக்கும், விலை பாதாளம் நோக்கி செல்லும். பயந்து விட வேண்டாம். அதன் பிறகு அதன் வளர்ச்சி பெரும் பங்கு வகிக்கும். இழந்ததை மீட்பீர்கள், இது உறுதி. ஏனென்றால், மேற் சொன்ன துறைகளின் வளர்ச்சி, கட்டுமானத்தினைச் சார்ந்திருப்பதால், நிச்சயம் இந்த துறை எழுச்சி பெறும்.

தங்கம் வாங்கலாமா? தங்க பத்திரம் வாங்கலாமா? என்று யோசித்தீர்களேயென்றால், நிச்சயம் தங்கப் பத்திரம் வாங்கலாம். தங்கத்தின் விலையில் பெரிய அளவிற்கு மாற்றமிருக்கும் அதுவும் தற்காலிகமே, 80000 வரை செல்லும் ஒரு சவரன் என்று சொல்லக்கேட்டிருப்பீர்கள், எனக்கென்னவோ அப்படி தோன்றவில்லை, ஒரு சவரன் 50,000-60,000 வரை செல்லலாம், ஒரு வேளை நாம் ஜூன் மாதத்திற்கு பிறகு நிலைமை சரியாகி விட்டது என்று வைத்துக்கொண்டோமேயானால், வரும் ஜூன் 2021 வரை இப்படி ஏற்றத் தாழ்வுகள் தங்கத்தின் விலையிலிருக்கும். இதன் விலை மறுபடியும் இப்போதிருக்கும் விலைக்கே வரலாம். ஆகையால் குறுகிய கால முதலீடு, குறுகிய கால லாபம் பெற நினைப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

நீங்கள் பிற துறை சார்ந்து கேள்விகள் கேளுங்கள் நான் எனக்குத் தெரிந்தவரை பதில் சொல்கிறேன்

2 comments:

  1. Land rates koraiyuma shankar anna ? Vaangalama ?

    ReplyDelete
    Replies
    1. Yes definitely, Wait and see is the best rule to be followed now.

      Delete

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...