Tuesday 16 August 2016

என் பார்வையில் கபாலி

ரஜினியின் படம், என் ஆதர்ச கதாநாயகனின் படம். பல வருடங்களுக்குப்பிறகு திரையரங்கில் பார்த்த படம், நிச்சயம் பாராட்டுக்களே.
ஒரே பாடலில் பல கோடி அதிபதியாகாத படம். தொடங்கும் போதே மிரட்டலாய் காட்ட நினைத்த படம்.
எதையும் எதிர்பார்க்காமல் படத்தினைப் பார்த்தால் படம் சலிக்காது.
ஒரு வேகமான கதாப்பாத்திரத்திற்கு திரைக்கதையில் வேகம் கொடுத்தருக்கலாம்.
இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரஜினியும் மாற்றப்பட்ட படம், அவரின் அடுத்தப் படங்களில் வரப்போகும் மாற்றங்களை முன்னிறுத்தும் படமாக இது அமையும்.
படத்தின் ஒரே வெற்றி, எங்கு நோக்கினும் """மகிழ்ச்சி""".
பிரம்மாண்டமான விளம்பரத்திற்கு, ரஜினி ஒன்றைத் தவிர, திரைக்கதையும்இல்லை, திரைப்படமுமில்லை.
அயராத உழைப்பு படத்தில் இழையோடுகிறது, அங்கே, அங்கே. அதற்கு வாழ்த்துக்கள். படத்தினை திறனோடு எடுக்க சிரம்மேற்கொள்ளாமல், ரஜினி விளம்பரத்தில் சரி கட்ட நினைத்த மற்றுமொரு படம்.
மகிழ்ச்சி வெறும் வார்த்தையில் மட்டுமே....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...