Tuesday 16 August 2016

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்
என்னைப் பார்த்து பார்த்து
என்னுள் மறையும் நேரம்
என் முன்னே நீ கடக்க
எனக்குள் ஏதோ மாயம் செய்தாய்…
நொடியில் மறைந்தாலும்
நொடிக்கொரு முறை உன்னைத் தேடி
நொடிமுள்ளை சபிக்கிறேன்
நொடியெல்லாம் உன் நினைவாக…
பார்த்தாய் சிரித்தாய் பேசினாய்
பார்த்து பார்த்து மாய்ந்து போனேன்
பார்க்காமல் மரத்துப் போனேன்
பார்க்க பார்க்க சளைக்காமல் நீ….
பேசும் ஒரு வார்த்தைக்கு
பேசாமல் மௌனம் காத்தேன் பலரோடு…
எனக்காக நீ தந்தது சிரிப்பு தான்
உனக்காக என்னையே தர காத்திருந்தேன்
உனக்குத் தெரியுமா
உன்னை நீ மறந்தாலும் நான் மறவேன்….
எப்படி முடிகிறது உனக்கு
என்னை இம்சித்துவிட்டு மனதார
எனக்கே தெரியாமல்
என்னுள் பயணம் செய்ய…
நான் மட்டும் ரசித்ததை
நான் மட்டும் சுவைத்ததை
நான் மட்டும் கேட்டதை
நான் மட்டுமே ரசிக்கிறேன் தனியாக….
நீ நான், நான் நீ
எத்தனை முறை எழுதியிருப்பேன்
எழுதும்போதெல்லாம் அருகில் இருந்தாய்
எழுதும் வரை ரசித்திருந்தாய்
எங்கே போனாயோ என் அருமை காதலே…
தூர போனாயோ தூரத்திற்கு போனாயோ
தூரமிட்டாலும் இன்றும் அருகிலே
தூக்கத்திலும் கனவாக பயணிக்கிறாய்…
இமைக்கும் நொடியில் சொல்ல நினைத்து
இதயத்தில் இறுதிவரை சுமக்கிறேன்
இன்பமாய் இருந்ததை
இருளில் புதைத்தேனே மனதோடு…
நண்பர்களே!!!
வேண்டாம் சொல்லாத காதல்
வேண்டாம் என்றாலும் சொல்லிடுங்கள்
வேண்டாததை சுமக்க வேண்டாமே….
ஒரு தலையாய் சுமந்து
ஒருவராய் மடிவதை விட
ஒவ்வொருவரும் பகிர்ந்திடுவோம் காதலை
ஒரு சாரர் சொந்தமல்ல காதல்

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...