Tuesday 16 August 2016

அன்னையர் தின வாழ்த்து


கருவில் உருவாகி உயிரை உருவாக்கும்
கருவின் கருவே கண்ணே கண்மணியே
கருத்தாய் உனைவைத்து எழுத்தால் வருடுகிறேன்
கடவுள் நீயென உலகில் உணர்கிறேன்...
பத்து திங்கள் கருவில் சுமந்து
பஞ்சாய் உணர்ந்து பரிவாய் நினைந்து
பதார்த்ததிலும் பத்தியமிட்டு பாசமாய் உள்ளுக்குள்ளே
பரிவோடும் பரவசமோடும் உதிரமோடு உயிரிட்டு...
உள்ளேயே உருவமிட்டு ஆண்/பெண் வடிவமிட்டு
உறுப்புகள் ஒவ்வொன்றும் உன் வயிற்றுனுள்ளே
உல்லாசமாய் வளரவிட்டு சுதந்திரமாய் கட்டுக்குள்ளே
உறவாய் உன் உறுப்புகளோடு உலாவர....
மாதமோ பத்தானது உன்னைக் காண
மாதக்கணக்கில் தவமிருந்து மடியில் தவழ்ந்து
மாறும் உலகில் வெளிச்சமோடு இருளும்
மாறாத உன் உலகிலிருந்து காணவருகிறேன்...
எட்டி உதைத்த போதும் நகைத்தாய்
எள்ளி நகையாடிய போதும் நகைத்தாய் - உனை
எண்ணி நானிருக்க விக்கிட்டு நீரிட்டாய்
எப்படியிருப்பாய் நீயென ஆவலோடு வருகிறேன்...
நீ யாரென எனக்குத் தெரியாது
நீயோர் உயிரிட்டு உணவிடும் உத்தமன்(மி)
நீ என்னை ஈன்றெடுக்க உன்னைத் தந்தவள்
நீ எப்படியிருப்பாய் ஆவலோடு வருகிறேன்...
அந்த நிமிடம் வந்தது வெளிச்சமோடு
அணு அணுவாய் வெளியேறுகிறேன் உனைவிட்டு
அசுர வலியினையும் எனக்காகத் தாங்குகிறாய்
அயராமல் உனை வதைத்து வெளியேறுகிறேன்...
கண் கூசுகிறது நாசி நானுகிறது
கலைந்த உடல் உதிரமோடு வெளியேற
கருவறை சுகம் காற்றோடு மறைந்தது
கண்ணே, நீ தானா அந்த கடவுள்....
தாயே, அன்னையே, அம்மாவே
தரணியில் வந்துதுதிக்க வித்திட்டவளே
எப்படி சொல்வேனோ என்னவென்று சொல்வேனோ
என்னை வெளியிட
உன்னைக் கொடுத்த என்
அன்னையே - வணங்குகிறேன்
உன்னையே...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...