Sunday, 12 May 2013

அன்னையர் தின வாழ்த்து


கருவில் உருவாகி உயிரை உருவாக்கும்
கருவின் கருவே கண்ணே கண்மணியே
கருத்தாய் உனைவைத்து எழுத்தால் வருடுகிறேன்
கடவுள் நீயென உலகில் உணர்கிறேன்...

பத்து திங்கள் கருவில் சுமந்து
பஞ்சாய் உணர்ந்து பரிவாய் நினைந்து
பதார்த்ததிலும் பத்தியமிட்டு பாசமாய் உள்ளுக்குள்ளே
பரிவோடும் பரவசமோடும் உதிரமோடு உயிரிட்டு...

உள்ளேயே உருவமிட்டு ஆண்/பெண் வடிவமிட்டு
உறுப்புகள் ஒவ்வொன்றும் உன் வயிற்றுனுள்ளே
உல்லாசமாய் வளரவிட்டு சுதந்திரமாய் கட்டுக்குள்ளே
உறவாய் உன் உறுப்புகளோடு உலாவர....

மாதமோ பத்தானது உன்னைக் காண
மாதக்கணக்கில் தவமிருந்து மடியில் தவழ்ந்து
மாறும் உலகில் வெளிச்சமோடு இருளும்
மாறாத உன் உலகிலிருந்து காணவருகிறேன்...

எட்டி உதைத்த போதும் நகைத்தாய்
எள்ளி நகையாடிய போதும் நகைத்தாய் - உனை
எண்ணி நானிருக்க விக்கிட்டு நீரிட்டாய்
எப்படியிருப்பாய் நீயென ஆவலோடு வருகிறேன்...

நீ யாரென எனக்குத் தெரியாது
நீயோர் உயிரிட்டு உணவிடும் உத்தமன்(மி)
நீ என்னை ஈன்றெடுக்க உன்னைத் தந்தவள்
நீ எப்படியிருப்பாய் ஆவலோடு வருகிறேன்...

அந்த நிமிடம் வந்தது வெளிச்சமோடு
அணு அணுவாய் வெளியேறுகிறேன் உனைவிட்டு
அசுர வலியினையும் எனக்காகத் தாங்குகிறாய்
அயராமல் உனை வதைத்து வெளியேறுகிறேன்...

கண் கூசுகிறது நாசி நானுகிறது
கலைந்த உடல் உதிரமோடு வெளியேற
கருவறை சுகம் காற்றோடு மறைந்தது
கண்ணே, நீ தானா அந்த கடவுள்....

தாயே, அன்னையே, அம்மாவே
தரணியில் வந்துதுதிக்க வித்திட்டவளே
எப்படி சொல்வேனோ என்னவென்று சொல்வேனோ

என்னை வெளியிட
உன்னைக் கொடுத்த என்
அன்னையே - வணங்குகிறேன்
உன்னையே...

இதை எழுத எப்போதும் போல் ஊக்குவித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. Subha Chellappan அவர்கள் எழுத சொல்ல உடனடியாக எழுதிய மற்றுமொரு கவிதை.

Wednesday, 20 March 2013

கடற்கரை

நீண்ட கடலோரம் உலா சென்றேன்
நீளும் அலையோடு கை கோர்த்து
நீங்காத நினைவுகள் மனதில் நிறுத்தி....

வாடை காற்று வாஞ்சையாய் தொட்டது
வாழும் ஒவ்வொரு மணிதுளியும்
வாழ்விற்கு பொருள் சேர்த்தது....

அலையாய் வந்துதித்த எண்ணங்கள்
அலையாமல் ஓய்ந்து போனது
அமைதியாய் கடல் நீர் வருடிச் சென்றது...

தூரத்து மின் விளக்கு வெளிச்சமிட்டது
தூங்காத கப்பல்கள் கட்டிடமாயின
துயிலாத கடலும் ராகமிட்டது....

மணலெல்லாம் கலப்படமாயின குப்பைகளால்
மணலும் மந்திரப்படுக்கையாயின ஜோடிகளுக்கு
மறைந்தே மர்மமிடும் மர்மமென்ன...

கடல் உயிர் வாங்கினாலும்
கள்வன் பல உள்ளங்களைக்
கவர்ந்திழுப்பதால் தினமும்....

இங்கே பாகுபாடும் இல்லை
இங்கே வேறுபாடும் இல்லை
இங்கே நாயோடு மனிதனும் உலாவருவதால்....

காற்றில் மனம் லயிக்கிறது
காற்றில் மனம் மிருதுவாகிறது
காற்றில் வயோதிகம் மறைகிறது...

ஒவ்வொரு வயதினரும் குதூகலமாய்
ஒன்றையும் நினையாமல்
ஒன்றில் ஒன்றிப் போகுமிடம் கடற்கரை....

தேடுகிறேன் என் பைங்கிளியை... (ஒரு உள்ளத்தின் தேடல்)


தொலையாத ஒன்றை
தொலைத்தது போல் தேடுகிறேன்
தொலைவில் இருக்கும் நீ
தொலைந்து போனதாய் தேடுகிறேன்...


எங்கே இருக்கிறாயோ
என்ன நினைக்கிறாயோ
எனக்காகப் பிறந்தவளே
என்னைக் காக்க விட்டு
எனக்காக காத்திருப்பவளே...

அடி மேல் அடிவைத்து
அலையாத என் மனதை
அளவிட வருவாயோ
அள்ளிப் பருக ஆசையோடு வருவாயோ...

துள்ளும் இதயம் உன் நினைப்பில்
துவளாமல் காத்திருக்க
துடிப்போடு துடிக்கிறது இதயம்
துயிலும் தருனத்திலும் உன் நினைவில்
எங்கே என் பைங்கிளியே...

காத்திருக்கிறேன் காணவில்லை
காத தூரம் பார்த்திருக்கிறேன்
காணும் விழியெல்லாம் பூத்திருக்கிறேன்
காதலோடு நீ வருவாய் என...

உன்னை எப்படி அழைப்பேனோ
உன்னை எப்படி காப்பேனோ
உன்னை எப்படியெல்லாம் கொஞ்சுவேனோ
உன்னை எப்படி வெட்கமாய் இருக்கிறது
உன் நினைவில் நான் வெட்கமிடுகிறேன்...

காதல் ரசத்தில் மூழ்கி
காதல் சயனத்தில் ஆழ்ந்துவிடுகிறேன்
காதல் தேவதையே
காத்திருக்கிறேன் நீ வருவாய் என...

தேடுகிறேன் என் பைங்கிளியே
தேடுகிறேன் என் பார்வைக்காக
தேடுகிறேன் என் உள்ளத்தின் வாயிலாக..

இது ஒரு இனிய பயணம்
இலக்கும் நோக்கமும் இனிதாக
இடைவெளி விட்டு பயணிக்கும் பயணம்
அருகாமை தேடி....
தேடுகிறேன் என் பைங்கிளியை...
(ஒரு உள்ளத்தின் தேடல்)

தொலையாத ஒன்றை
தொலைத்தது போல் தேடுகிறேன்
தொலைவில் இருக்கும் நீ
தொலைந்து போனதாய் தேடுகிறேன்...


எங்கே இருக்கிறாயோ
என்ன நினைக்கிறாயோ
எனக்காகப் பிறந்தவளே
என்னைக் காக்க விட்டு
எனக்காக காத்திருப்பவளே...

அடி மேல் அடிவைத்து
அலையாத என் மனதை
அளவிட வருவாயோ
அள்ளிப் பருக ஆசையோடு வருவாயோ...

துள்ளும் இதயம் உன் நினைப்பில்
துவளாமல் காத்திருக்க
துடிப்போடு துடிக்கிறது இதயம்
துயிலும் தருனத்திலும் உன் நினைவில்
எங்கே என் பைங்கிளியே...

காத்திருக்கிறேன் காணவில்லை
காத தூரம் பார்த்திருக்கிறேன்
காணும் விழியெல்லாம் பூத்திருக்கிறேன்
காதலோடு நீ வருவாய் என...

உன்னை எப்படி அழைப்பேனோ
உன்னை எப்படி காப்பேனோ
உன்னை எப்படியெல்லாம் கொஞ்சுவேனோ
உன்னை எப்படி வெட்கமாய் இருக்கிறது
உன் நினைவில் நான் வெட்கமிடுகிறேன்...

காதல் ரசத்தில் மூழ்கி
காதல் சயனத்தில் ஆழ்ந்துவிடுகிறேன்
காதல் தேவதையே
காத்திருக்கிறேன் நீ வருவாய் என...

தேடுகிறேன் என் பைங்கிளியே
தேடுகிறேன் என் பார்வைக்காக
தேடுகிறேன் என் உள்ளத்தின் வாயிலாக..

இது ஒரு இனிய பயணம்
இலக்கும் நோக்கமும் இனிதாக
இடைவெளி விட்டு பயணிக்கும் பயணம்
அருகாமை தேடி....

ஒரு இலையின் பூமி நோக்கி பயணம்


வான் பார்த்த பூமி
வாசமாய் போனதால்
மண் வாசமெடுத்து
மண்ணும் ஈரமானது மழையினால்...

மண்ணில் உறங்கிய விதை
மண்ணோடு மண்ணாக இருந்தது
மண்ணோடு தனை காத்து
மறைந்தே பறவை பூச்சிகளிடமிருந்து தன்னை
மண்ணில் துளிர்ந்தது..

அடைமழை அடித்த போதும்
ஆடி காற்று அடித்த போதும்
அசையாமல் ஆடாமல் இருந்து
ஆர்பரிக்காமல் வளர்ந்தது....

விதை துளிர்ந்து வின் நோக்கி
வியப்போடு பயணம் தொடங்கியது
விடாமல் முயற்சித்து
விட்டது கிளைகளை படிப்படியாக...

விட்ட கிளை நரம்பில்
விடாமல் பற்றிக்கொண்டது இலைகள்
வியர்க்கும் சூரியன்
விட்ட நெருப்பில் பச்சைநிறம் பற்றியது....

சூரியன் தகித்தாலும்
சூழும் இயற்கையின் பரிணாமத்தில்
சூழ்ந்தது இலையில் பச்சைநிறம்
சூசகமாய் இலை வடிவமெடுத்தது...

இலையின் கண்கள் விரிந்தது
இதழோரம் புன்னகையோடு
இலை சுற்றிப் பார்த்தது
இலை மேலிருந்து பார்த்தது
இலை மேலேயும் பார்த்தது
இலையின் உடன் பிறவாக்களை...

இலைக்கு ஒரே பெருமை
இலை மட்டுமே பசுமையாக
இலைக் கிளைகளும் ஆங்காங்கே
இலவச நிறமின்றி வெறுமையாக மரம்...

இலை சூரியனை வணங்கியது
இலையோரம் மஞ்சள் வெய்யிலிட்டப் போது
இலை சக்தியினை வாங்கியது
இயற்கையின் துணையோடு...

இலை உணவருந்தி
இளைப்பார ஓய்வெடுத்தது
இன்பகல் மேலோடியது
இதமாக சூரியன் வருடினான்...

இசைக் காற்று தாலாட்ட
இன்னிசையில் அசைந்தாடியது
இன்றும் பட்டிமன்றமாம்
இலையசைவில் காற்று வந்ததா?
இல்லை காற்று வந்ததால் இலையசைந்ததா?

இலை இசைக் காற்றில் தவழ்ந்தது
இலை தன் உடலசைத்து மகிழ்ந்தது
இப்படியாக வளர்ந்து தழைத்தது
இன்னமும் பெரிதாக...

வானத்தில் சத்தம் இடியாம்
வானமே நடுங்கியது
வான் பார்த்து பயந்தது இலை
வாடைக் காற்று நாசி அடைத்தது...

பாவம் இலை பயந்து நடுங்கியது
பாதி மேல் பார்த்து கீழ் பார்த்து
பாதியினை மடித்து
பாவி காற்றைச் சபித்தது...

நரம்பு முருக்கேறி முயன்று பார்த்தது
நன்றாய் காக்க இயன்றவரை முயன்றது...

என் செய்ய என்னைப் பார்த்தேன்
என்னை வளர்த்த கிளை
என்னைக் காக்க போராடியது
என்னோடு சேர்ந்து காற்றோடு....

என்னைத் திடீரென்று பிரித்தெடுத்தது
எனக்கு உடம்பெல்லாம் வலித்தது
என்னை பிரித்தெடுத்த சதிகாரனானது காற்று
என்னைத் தாலாட்டிய காற்றே
என்னையும் தவிக்க விட்டது...

நான் எங்கே இருக்கிறேன்
நான் வளர்ந்த கிளை
நான் பார்க்கும் போதே
நான் போவதை நினைத்து பதறுகிறது...

என்னோடு பிறந்தவர்கள்
என் முன்னே பிறந்தவர்கள்
எனக்காக வருத்தமிட
என் பொருட்டு க்ரம் நீட்டி அசைந்தாட
என் பயணம் தொடர்கிறது...

என் பயணம் வேகமாகிறது
என்னைத் தாங்கிய மூதாதையரான மரம்
எனக்காக கீழிருந்து அழுகிறது...

தினம் தினம் என் சகோதரி பூ
திண்டாடி விழுந்தபோது தவித்திருக்கிறேன்
தினம் தினம் அவள் சாவில்
திக்கற்று திசையற்று தவித்திருக்கிறேன்...

எனக்காக வாடி அவள்
என்னைச் சேர்த்தணைத்தாள்
என்னை வருடி தழுவினாள்
நான் பூமி வந்த போது....
ஒரு இலையின் பூமி நோக்கி பயணம்

வான் பார்த்த பூமி
வாசமாய் போனதால்
மண் வாசமெடுத்து
மண்ணும் ஈரமானது மழையினால்...

மண்ணில் உறங்கிய விதை
மண்ணோடு மண்ணாக இருந்தது
மண்ணோடு தனை காத்து
மறைந்தே பறவை பூச்சிகளிடமிருந்து தன்னை
மண்ணில் துளிர்ந்தது..

அடைமழை அடித்த போதும்
ஆடி காற்று அடித்த போதும்
அசையாமல் ஆடாமல் இருந்து
ஆர்பரிக்காமல் வளர்ந்தது....

விதை துளிர்ந்து வின் நோக்கி
வியப்போடு பயணம் தொடங்கியது
விடாமல் முயற்சித்து
விட்டது கிளைகளை படிப்படியாக...

விட்ட கிளை நரம்பில்
விடாமல் பற்றிக்கொண்டது இலைகள்
வியர்க்கும் சூரியன் 
விட்ட நெருப்பில் பச்சைநிறம் பற்றியது....

சூரியன் தகித்தாலும் 
சூழும் இயற்கையின் பரிணாமத்தில்
சூழ்ந்தது இலையில் பச்சைநிறம்
சூசகமாய் இலை வடிவமெடுத்தது...

இலையின் கண்கள் விரிந்தது
இதழோரம் புன்னகையோடு 
இலை சுற்றிப் பார்த்தது
இலை மேலிருந்து பார்த்தது
இலை மேலேயும் பார்த்தது
இலையின் உடன் பிறவாக்களை...

இலைக்கு ஒரே பெருமை
இலை மட்டுமே பசுமையாக
இலைக் கிளைகளும் ஆங்காங்கே
இலவச நிறமின்றி வெறுமையாக மரம்...

இலை சூரியனை வணங்கியது
இலையோரம் மஞ்சள் வெய்யிலிட்டப் போது
இலை சக்தியினை வாங்கியது
இயற்கையின் துணையோடு...

இலை உணவருந்தி 
இளைப்பார ஓய்வெடுத்தது
இன்பகல் மேலோடியது
இதமாக சூரியன் வருடினான்...

இசைக் காற்று தாலாட்ட
இன்னிசையில் அசைந்தாடியது
இன்றும் பட்டிமன்றமாம்
இலையசைவில் காற்று வந்ததா?
இல்லை காற்று வந்ததால் இலையசைந்ததா?

இலை இசைக் காற்றில் தவழ்ந்தது
இலை தன் உடலசைத்து மகிழ்ந்தது
இப்படியாக வளர்ந்து தழைத்தது
இன்னமும் பெரிதாக...

வானத்தில் சத்தம் இடியாம்
வானமே நடுங்கியது
வான் பார்த்து பயந்தது இலை
வாடைக் காற்று நாசி அடைத்தது...

பாவம் இலை பயந்து நடுங்கியது
பாதி மேல் பார்த்து கீழ் பார்த்து
பாதியினை மடித்து 
பாவி காற்றைச் சபித்தது...

நரம்பு முருக்கேறி முயன்று பார்த்தது
நன்றாய் காக்க இயன்றவரை முயன்றது...

என் செய்ய என்னைப் பார்த்தேன்
என்னை வளர்த்த கிளை
என்னைக் காக்க போராடியது
என்னோடு சேர்ந்து காற்றோடு....

என்னைத் திடீரென்று பிரித்தெடுத்தது
எனக்கு உடம்பெல்லாம் வலித்தது
என்னை பிரித்தெடுத்த சதிகாரனானது காற்று
என்னைத் தாலாட்டிய காற்றே
என்னையும் தவிக்க விட்டது...

நான் எங்கே இருக்கிறேன்
நான் வளர்ந்த கிளை
நான் பார்க்கும் போதே
நான் போவதை நினைத்து பதறுகிறது...

என்னோடு பிறந்தவர்கள்
என் முன்னே பிறந்தவர்கள்
எனக்காக வருத்தமிட
என் பொருட்டு க்ரம் நீட்டி அசைந்தாட
என் பயணம் தொடர்கிறது...

என் பயணம் வேகமாகிறது
என்னைத் தாங்கிய மூதாதையரான மரம்
எனக்காக கீழிருந்து அழுகிறது...

தினம் தினம் என் சகோதரி பூ
திண்டாடி விழுந்தபோது தவித்திருக்கிறேன்
தினம் தினம் அவள் சாவில்
திக்கற்று திசையற்று தவித்திருக்கிறேன்...

எனக்காக வாடி அவள்
என்னைச் சேர்த்தணைத்தாள்
என்னை வருடி தழுவினாள்
நான் பூமி வந்த போது....

பூக்கள் நெய்த ஆடை


அடுக்கி வைத்த விறகொன்று சிரித்தது
அடுக்காத விறகினை நோக்கி..

விதையாய் விழுந்த போது
விருட்சமாய் கற்பனையிட்டேன்
விழுந்ததில் தேய்ந்திருப்பேன் என
வினை சிரிப்பில் ஆழ்ந்தனர் சிலர்...

வின் நோக்கி வளர்ந்தேன்
விதை செடியாகி துளிரிட்டது...

செடியாய் வளர்ந்து கொடியாய் படர்ந்தேன்
செறுக்கின்றி மிடுக்கோடு வளர்ந்தேன்
செடியில் கிளை வைத்து மரமானேன்...

மரமாகி கிளை வைத்து
மறக்காமல் கிளையெல்லாம் இலையிட்டேன்
மண்ணும் வின்னும் பசுமையிட
மரகந்த சேர்க்கைக்கு அரும்பு விட்டேன்...

மொட்டாய் இருந்தது
மொத்தமாய் மலர்ந்தது
பூவாய் ஜனித்தது...

தலை நிமிர்ந்து வான் நோக்கினேன்
தலை சாய்ந்து கீழும் நோக்கினேன்
தரித்திரமாய் செறுக்கு வந்து
தாங்காத ஆட்டமிட்டேன்.

சிந்தித்து செயல்பட கூடலையோ
சிந்தையில் ஒருமையிட முடியலையோ
சிந்திக்காமல் செய்தவினை
சிந்தினேன் சிறகான கிளைகளை....

வெட்டி எரிந்தனர்
விறகாய் போனேன்
வீண் ஜம்பம் செய்தமையால்...

மொட்டிட்டு மலர்ந்த பூ
மொத்தமாய் கொட்டியது
இன்று பூக்கள் நெய்த ஆடையானது
நான் பார்த்த பூமி
என் மலரால் மென்மையிட்டு
எனக்கே பாதையானது...

கிளையே நீயும் சொல்
வீண் ஜம்பம் வேண்டாமென்று
வீணாய் ஆடவேண்டாமென்று
ஆறறிவு மனிதனுக்கு....

வீழ்ந்தது மரம் மட்டுமல்ல
வீழ்ந்தது ஆணவமும் தான்
விறகுகள் சேர்த்து
இயந்திர மனிதராய் ஆக வேண்டாமென்று....
பூக்கள் நெய்த ஆடை

அடுக்கி வைத்த விறகொன்று சிரித்தது
அடுக்காத விறகினை நோக்கி..

விதையாய் விழுந்த போது
விருட்சமாய் கற்பனையிட்டேன்
விழுந்ததில் தேய்ந்திருப்பேன் என
வினை சிரிப்பில் ஆழ்ந்தனர் சிலர்...

வின் நோக்கி வளர்ந்தேன்
விதை செடியாகி துளிரிட்டது...

செடியாய் வளர்ந்து கொடியாய் படர்ந்தேன்
செறுக்கின்றி மிடுக்கோடு வளர்ந்தேன்
செடியில் கிளை வைத்து மரமானேன்...

மரமாகி கிளை வைத்து
மறக்காமல் கிளையெல்லாம் இலையிட்டேன்
மண்ணும் வின்னும் பசுமையிட
மரகந்த சேர்க்கைக்கு அரும்பு விட்டேன்...

மொட்டாய் இருந்தது
மொத்தமாய் மலர்ந்தது
பூவாய் ஜனித்தது...

தலை நிமிர்ந்து வான் நோக்கினேன்
தலை சாய்ந்து கீழும் நோக்கினேன்
தரித்திரமாய் செறுக்கு வந்து
தாங்காத ஆட்டமிட்டேன்.

சிந்தித்து செயல்பட கூடலையோ
சிந்தையில் ஒருமையிட முடியலையோ
சிந்திக்காமல் செய்தவினை
சிந்தினேன் சிறகான கிளைகளை....

வெட்டி எரிந்தனர்
விறகாய் போனேன் 
வீண் ஜம்பம் செய்தமையால்...

மொட்டிட்டு மலர்ந்த பூ
மொத்தமாய் கொட்டியது
இன்று பூக்கள் நெய்த ஆடையானது
நான் பார்த்த பூமி
என் மலரால் மென்மையிட்டு 
எனக்கே பாதையானது...

கிளையே நீயும் சொல்
வீண் ஜம்பம் வேண்டாமென்று
வீணாய் ஆடவேண்டாமென்று
ஆறறிவு மனிதனுக்கு....

வீழ்ந்தது மரம் மட்டுமல்ல
வீழ்ந்தது ஆணவமும் தான்
விறகுகள் சேர்த்து
இயந்திர மனிதராய் ஆக வேண்டாமென்று....

தள்ளி யிருப்பவளே நெருங்கி வா...

தனியாக தவிக்க விட்டு
தன்னந்தனியே ரசிக்க விட்டு
தள்ளி யிருப்பவளே நெருங்கி வா...

கனவாய் இருப்பவளே
கற்பனையாய் உனை வடிவமைத்து
கண்ணுக்குள் பூக்கிறேன்...

என்னை எத்தனை முறை கடந்தாயோ
என்னை எப்படியெல்லாம் பார்த்தாயோ
எனக்கே தெரியாமல்...

உன்னை தேடுவதாக நினைத்து
உன்னிடமே கேட்டிருப்பேனோ
உன்னைப் பற்றி...

அன்பே!!!!
அழகாய் வடிவமைத்து
அடுக்காய் சொல்லெடுத்து
அழகாய் சமைக்கிறேன் கவிதையினை
அருகில் வா சேர்ந்தே ரசிப்போம்...

பணம் தேடும் பயணமிது.......

என் புரட்டப்படாத நாளேடுவிலிருந்து... - ஆச்சரிய கேள்விகளுடன் விடைக்காக

வான் பார்த்து பூமி காய்ந்திருந்தது
வானவில்லும் நிறமறந்து போனது
வான் வெய்யிலில் ஜொலித்தது
வான வீதியில் சூரியன் ஆட்சி செய்தது....

நிலவும் இருளில் கொதித்தது
நில்லாமல் பயணித்து நாட்களை நகர்த்தியது
நிற்குமோ நிலைக்குமோ என
நிலை குலைந்து போனது பூமியும்...

மரம் நிறம் மறந்து போனது
மரமாய் போன மக்கள்
மறந்து போயினர் மரத்தினை
மரத்து போயினர் மனிதர்கள்....

காணொலி காட்சியானது தண்ணீரும்
காணாத காட்சியானது நன்நீரும்
காணல் நீரும் காத்திருப்பில்
காட்சிப் பொருளானது மக்களுக்கு...

விதை வடிவமிழந்து வண்ணமிழந்து
விருட்சத்திற்கு விலாசம் தேடுகிறது
விரசம் மறந்து பூமியும் விலக்கிட்டது
விதை விடியல் தேடுகிறது ஓளியுனுள்...

மரம் பார்த்த பூமி கட்டிடங்களில்
மடிந்து போனது செம்மண்ணும் கரிசலும்
மண்புழுவாய் மனிதர்கள் பூமியரித்து
மண்ணில் ஈரமும் மரித்து போனது....

எங்கே அறிவியல்? எங்கே விஞ்ஞானிகள்?
எங்கே தேடுவீர்கள்? எங்கெங்கினும் மனிதர்கள்
எதைப் பார்த்தாலும் கேட்டாலும் கொடுத்தாலும்
எங்கிருந்து வந்ததோ பணம்...

பணம் தேடும் பயணமிது.......

நம்பிக்கையோடு போராடு


எட்டி உதைத்த கால்களையும்
எள்ளி நகையாடிய இதழ்களையும்
எரிச்சலிட்ட கடிணமான தருணங்களையும்
எண்ணி எண்ணி நோகாமல்...

நகைத்தவரே பெருமையிட
நம்பிக்கையோடு போராடு
நகர்ந்து வரும் வெற்றியும் தான்....

அன்பு


அன்பு அடிமைத்தனம் அல்ல
அளவிடாமல் இருக்கும் வரை...

கோழை காலடியில் சுகம் தேடுகிறான்
கோட்டையாய் கனவு காண்கிறான்....

வீறு கொண்டு எழு
வீழ்ந்தது உடலென்றாலும்
வாழ்ந்தது வரலாறு ஆகட்டும்...

நான் நான் மட்டுமே...


என்னுள் என்னைத் தேடுங்கள்
என்னை விட்டு யாரைத் தேடினாலும்
என்னையன்றி யாருமில்லை...

நான் தனித்தேயிருக்கிறேன் - ஆனால்
நான் தனியாள் அல்ல
நான் ஓர் தனியுலகம்....

வார்த்தை ஒரு சிலருக்கு


வார்த்தை ஒரு சிலருக்கு
வார்த்தை தான் வாழ்க்கை பலருக்கு...

வெறும் வார்த்தை தானே என்று
வெட்டி பேச்சு பேசாமல்...

வார்த்தையில் அன்பிடுங்கள்
வார்த்தையில் வாழ்க்கையிடுங்கள்
வாழட்டும் உறவின் முறை
வாழ்த்தட்டும் தலைமுறை....

சிட்டு குருவிகள் தினம்...


சிறகுகள் உனக்கு அழகா
சிறகுகளுக்கு நீ அழகா
சிட்டு குருவியே!!!!

கீச் கீச் என கத்தி
கீரவானில் நட்சத்திரம் மறைத்து
கீழ்வானில் ஜோதியாய் கதிரவன் வர
சிட்டு குருவியே!!!

உன் பயணம் தொடங்குமே
உன் உலகம் திறக்குமே
உன்னைக் காணலையே எங்கே போனோயோ
சிட்டு குருவியே!!!!

செல்லமாய் சினுங்கியது
செல் பேசியும் உன் குரலில்
செல் பேசி அலைவரிசையில்
செல்லரித்துப் போனோயோ
சொல்லாமல் போனோயோ
சிட்டு குருவியே!!!

இன்னும் கடைகளில் விற்பனைக்கு
இனிக்க இனிக்க விற்கின்றனர்
இல்லற சிறக்க லேகியம் உன் பெயரில்
சிட்டு குருவியே!!!

மனிதன் மறந்தான் மரிக்கிறான்
மனிதம் மரத்து மடிகிறான்
மரமாய் போனவன் பாதையில்
மகுடமாய் உன் நினைவுகள்
சிட்டு குருவியே!!!

சிட்டு குருவியே!!!
சில்லிடுகிறது மனம் உன் நினைவில்
சிறகுகளில் அழகூட்டியே
சிறையலடைத்த நாட்களை எண்ணியே
சிட்டு குருவியே உன்னை நினைவு கூர்கிறேன்....

சிட்டு குருவியே!!!!
என் வாசலுக்கு வா
என் அலை பேசியை அழித்து விடுகிறேன்
எண்ண அலைகளை உனக்காக விரித்து காத்திருக்கிறேன்
விளையாடி மகிழலாம்
நானும் குழந்தைதான் உனைப் போல...

சந்தித்த நபர்களும் நட்புகளும்.. தொடர் 1 (1995-2012)

ஆண்டுகள் ஓடும் போது மனிதனின் வயதும் ஓடிக் கொண்டே தான் போகிறது.. என்ன செய்ய வயதொட்டிய பக்குவம் வராமல் அல்லாடும் மனது படும் பாடும் துயரங்களும் சொல்லிலடங்கா... சோகமாய் தொடங்கி சுகமாய் முடியட்டும் இத்தொடர் என விவரிக்க ஆரம்பிக்கிறேன்.. என் புரட்டப்படாத நாளேடுவிலிருந்து சில பக்கங்களை உங்களுக்காக...

அன்று எப்போதும் போல தான் நான் கல்லூரி படிப்பு முடிந்து மேற்படிப்பிற்காக அலை மோதி கொண்டிருந்த தருணம்.. என் வயதொட்டிய நண்பர்கள் எல்லாம் ஏதேனும் ஒரு ஒன்றில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பு நான் என்ன செய்ய போகிறேன் என்று. ஒரு பக்கம் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரைகள் குவியத் தொடங்கி கொண்டு தான் இருந்தன. அப்போது நான் சந்தித்த நபர்கள் கூடவா குறையவா என்று தெரியாது, ஆனால் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் எனக்கு உதவ வந்தார்கள். ஆம் அப்படி தான் உதவினார் ஒருவர். அவரின் உதவியால் எனக்கு ஒரு புது பாதை கிடைத்தது. அது நிலைக்குமா அல்லது அதனால் ஏற்படும் அசவுகரியங்கள் எதையும் எடை போடாமல் தொடங்கியது தான் ஆடிட்டர் கனவு வாழ்க்கை.. ஆம் முதன் முதல் பயணம் வாழ்க்கையில் நகரத்தை நோக்கி, சென்னை நோக்கி பயணம் 1995. அந்த நாள் அக்டோபர் 10, 1995. முதன் முதலாக அகண்ட சென்னையைப் பார்க்கிறேன். எங்கும் சைக்கிள் மட்டுமே பரவலாகத் திரிந்த என் காரைக்குடி எங்கே, எங்கு நோக்கினும் மோட்டார் மிதி வண்டிகள் அலை மோதும் சென்னை எங்கே? மக்கள் எல்லோரும் வேகமாக பயணித்தார்கள்.. யாருக்கும் நிற்கவோ, பேசவோ நேரமேயில்லை. எனக்கு இப்படிப்பட்ட சூழ்நிலை வேடிக்கையாக இருந்தது. எதுவும் அமைதியாக தொடங்கி நிதானமாகச் செல்லும் என் ஊர் காரைக்குடி. எதற்குமே அவசரம் இல்லை. இங்கே ஒரு வேளை சாவும் மெள்ள தான் வருமோ தெரியவில்லை.. அப்படி வளர்ந்த நான், சென்னை என்னை மிரள வைக்கவில்லை ஆனால் ஆச்சரியப்படுத்தியது. எதற்கு அவசரம் என்று புரியவில்லை... இன்று வரை தெரியவில்லை.

அன்று 11.10.1995 காலை 9 மணியளவில் என் அண்ணனுடன் நான் அடையாறுக்குச் செல்கிறேன் முதன் முதல் பயணம் சென்னை மாநகர பேரூந்துகளில்.. மயிலாப்பூர் எங்கள் அத்தை வீட்டிலிருந்து நான் என் அண்ணனும் என் அத்தை மகன் நண்பரான ஆடிட்டரைப் பார்க்க செல்கிறோம்.

மணி 10.00 சரியாக அவர் அலுவலகத்திற்கு வந்து விட்டோம். வரும் வெளியில் பருவ நிலாக்கள் என்னை ஆச்சரியப்படுத்தின, கட்டிடங்களும், மனிதர்களும் எனக்கு பிரமிப்பூட்டினார்கள். எல்லாமே ஆச்சரியம் தான் அப்போது.. (இப்போது மட்டும் என்ன)..அவருக்காக காத்திருந்தோம்..என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று என் அண்ணன் பாடம் நடத்துகிறான்.. அவர் வந்தார்..

-- தொடரும்

மின்னல் மின்னியும் மழை வரவில்லை


தொடுத்து வச்ச மொட்டும் அவள்
எடுத்து வைக்க ஆளின்றி 
கடுத்து மனம் உள்ளிருந்து 
விடுத்து சென்றது ஆசை பல....

நித்தம் நித்தம் பூக்காம அவள்
சத்தமின்றி காயப்பட்டுச் சந்தையிலே
எத்தன் யாரென்று காத்திருந்து
வித்தன் மேல் கொண்ட ஆசை பல....

பூக்காத பூவென்ற மொட்டான அவள்
சிக்காத மாதுமது சந்தையிலே
விற்காத ரோசா இதழ்விரித்து
கருக்காது கொண்ட ஆசை பல...

விரிக்காத பாயினிலே துயில அவள்
கரிக்காத அன்போடு சந்தையிலே
சிரிக்காத முகத்திற்கும் இதழிட்டு
எரிக்காது கொண்ட ஆசை பல...

ஒன்று வர காத்திருந்து அவள்
நின்று நின்று நொந்தது சந்தையிலே
கன்று காண பசுவுமது காத்திருந்து
என்றும் தீரா கொண்ட ஆசை பல...

தீர்ந்திடும் கவலையெல்லாம் காத்திருந்து அவள்
தீரா ஆசையோடு நீர்த்தது சந்தையிலே
தீர்ந்தது கனவோடு கன்னியுமே காத்திருந்து
தீரந்தது ஆசையும் காலத்தோடு பல...

மின்னல் மின்னியும் மழை வரவில்லை
மிரண்டனவோ கார் மேகம் கூடி கொட்டிடவோ
மின்னல் கொடி வாழ்க்கையில் மகிழ்ச்சியினை
மின்னாமல் மிளிர்ந்தவள் அந்த முதிர்கன்னி....

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...