Wednesday 20 March 2013

கடற்கரை

நீண்ட கடலோரம் உலா சென்றேன்
நீளும் அலையோடு கை கோர்த்து
நீங்காத நினைவுகள் மனதில் நிறுத்தி....

வாடை காற்று வாஞ்சையாய் தொட்டது
வாழும் ஒவ்வொரு மணிதுளியும்
வாழ்விற்கு பொருள் சேர்த்தது....

அலையாய் வந்துதித்த எண்ணங்கள்
அலையாமல் ஓய்ந்து போனது
அமைதியாய் கடல் நீர் வருடிச் சென்றது...

தூரத்து மின் விளக்கு வெளிச்சமிட்டது
தூங்காத கப்பல்கள் கட்டிடமாயின
துயிலாத கடலும் ராகமிட்டது....

மணலெல்லாம் கலப்படமாயின குப்பைகளால்
மணலும் மந்திரப்படுக்கையாயின ஜோடிகளுக்கு
மறைந்தே மர்மமிடும் மர்மமென்ன...

கடல் உயிர் வாங்கினாலும்
கள்வன் பல உள்ளங்களைக்
கவர்ந்திழுப்பதால் தினமும்....

இங்கே பாகுபாடும் இல்லை
இங்கே வேறுபாடும் இல்லை
இங்கே நாயோடு மனிதனும் உலாவருவதால்....

காற்றில் மனம் லயிக்கிறது
காற்றில் மனம் மிருதுவாகிறது
காற்றில் வயோதிகம் மறைகிறது...

ஒவ்வொரு வயதினரும் குதூகலமாய்
ஒன்றையும் நினையாமல்
ஒன்றில் ஒன்றிப் போகுமிடம் கடற்கரை....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...