Wednesday 20 March 2013

சந்தித்த நபர்களும் நட்புகளும்.. தொடர் 1 (1995-2012)

ஆண்டுகள் ஓடும் போது மனிதனின் வயதும் ஓடிக் கொண்டே தான் போகிறது.. என்ன செய்ய வயதொட்டிய பக்குவம் வராமல் அல்லாடும் மனது படும் பாடும் துயரங்களும் சொல்லிலடங்கா... சோகமாய் தொடங்கி சுகமாய் முடியட்டும் இத்தொடர் என விவரிக்க ஆரம்பிக்கிறேன்.. என் புரட்டப்படாத நாளேடுவிலிருந்து சில பக்கங்களை உங்களுக்காக...

அன்று எப்போதும் போல தான் நான் கல்லூரி படிப்பு முடிந்து மேற்படிப்பிற்காக அலை மோதி கொண்டிருந்த தருணம்.. என் வயதொட்டிய நண்பர்கள் எல்லாம் ஏதேனும் ஒரு ஒன்றில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பு நான் என்ன செய்ய போகிறேன் என்று. ஒரு பக்கம் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரைகள் குவியத் தொடங்கி கொண்டு தான் இருந்தன. அப்போது நான் சந்தித்த நபர்கள் கூடவா குறையவா என்று தெரியாது, ஆனால் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் எனக்கு உதவ வந்தார்கள். ஆம் அப்படி தான் உதவினார் ஒருவர். அவரின் உதவியால் எனக்கு ஒரு புது பாதை கிடைத்தது. அது நிலைக்குமா அல்லது அதனால் ஏற்படும் அசவுகரியங்கள் எதையும் எடை போடாமல் தொடங்கியது தான் ஆடிட்டர் கனவு வாழ்க்கை.. ஆம் முதன் முதல் பயணம் வாழ்க்கையில் நகரத்தை நோக்கி, சென்னை நோக்கி பயணம் 1995. அந்த நாள் அக்டோபர் 10, 1995. முதன் முதலாக அகண்ட சென்னையைப் பார்க்கிறேன். எங்கும் சைக்கிள் மட்டுமே பரவலாகத் திரிந்த என் காரைக்குடி எங்கே, எங்கு நோக்கினும் மோட்டார் மிதி வண்டிகள் அலை மோதும் சென்னை எங்கே? மக்கள் எல்லோரும் வேகமாக பயணித்தார்கள்.. யாருக்கும் நிற்கவோ, பேசவோ நேரமேயில்லை. எனக்கு இப்படிப்பட்ட சூழ்நிலை வேடிக்கையாக இருந்தது. எதுவும் அமைதியாக தொடங்கி நிதானமாகச் செல்லும் என் ஊர் காரைக்குடி. எதற்குமே அவசரம் இல்லை. இங்கே ஒரு வேளை சாவும் மெள்ள தான் வருமோ தெரியவில்லை.. அப்படி வளர்ந்த நான், சென்னை என்னை மிரள வைக்கவில்லை ஆனால் ஆச்சரியப்படுத்தியது. எதற்கு அவசரம் என்று புரியவில்லை... இன்று வரை தெரியவில்லை.

அன்று 11.10.1995 காலை 9 மணியளவில் என் அண்ணனுடன் நான் அடையாறுக்குச் செல்கிறேன் முதன் முதல் பயணம் சென்னை மாநகர பேரூந்துகளில்.. மயிலாப்பூர் எங்கள் அத்தை வீட்டிலிருந்து நான் என் அண்ணனும் என் அத்தை மகன் நண்பரான ஆடிட்டரைப் பார்க்க செல்கிறோம்.

மணி 10.00 சரியாக அவர் அலுவலகத்திற்கு வந்து விட்டோம். வரும் வெளியில் பருவ நிலாக்கள் என்னை ஆச்சரியப்படுத்தின, கட்டிடங்களும், மனிதர்களும் எனக்கு பிரமிப்பூட்டினார்கள். எல்லாமே ஆச்சரியம் தான் அப்போது.. (இப்போது மட்டும் என்ன)..அவருக்காக காத்திருந்தோம்..என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று என் அண்ணன் பாடம் நடத்துகிறான்.. அவர் வந்தார்..

-- தொடரும்

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...