Wednesday 20 March 2013

சிட்டு குருவிகள் தினம்...


சிறகுகள் உனக்கு அழகா
சிறகுகளுக்கு நீ அழகா
சிட்டு குருவியே!!!!

கீச் கீச் என கத்தி
கீரவானில் நட்சத்திரம் மறைத்து
கீழ்வானில் ஜோதியாய் கதிரவன் வர
சிட்டு குருவியே!!!

உன் பயணம் தொடங்குமே
உன் உலகம் திறக்குமே
உன்னைக் காணலையே எங்கே போனோயோ
சிட்டு குருவியே!!!!

செல்லமாய் சினுங்கியது
செல் பேசியும் உன் குரலில்
செல் பேசி அலைவரிசையில்
செல்லரித்துப் போனோயோ
சொல்லாமல் போனோயோ
சிட்டு குருவியே!!!

இன்னும் கடைகளில் விற்பனைக்கு
இனிக்க இனிக்க விற்கின்றனர்
இல்லற சிறக்க லேகியம் உன் பெயரில்
சிட்டு குருவியே!!!

மனிதன் மறந்தான் மரிக்கிறான்
மனிதம் மரத்து மடிகிறான்
மரமாய் போனவன் பாதையில்
மகுடமாய் உன் நினைவுகள்
சிட்டு குருவியே!!!

சிட்டு குருவியே!!!
சில்லிடுகிறது மனம் உன் நினைவில்
சிறகுகளில் அழகூட்டியே
சிறையலடைத்த நாட்களை எண்ணியே
சிட்டு குருவியே உன்னை நினைவு கூர்கிறேன்....

சிட்டு குருவியே!!!!
என் வாசலுக்கு வா
என் அலை பேசியை அழித்து விடுகிறேன்
எண்ண அலைகளை உனக்காக விரித்து காத்திருக்கிறேன்
விளையாடி மகிழலாம்
நானும் குழந்தைதான் உனைப் போல...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...