Wednesday 20 March 2013

ஒரு இலையின் பூமி நோக்கி பயணம்


வான் பார்த்த பூமி
வாசமாய் போனதால்
மண் வாசமெடுத்து
மண்ணும் ஈரமானது மழையினால்...

மண்ணில் உறங்கிய விதை
மண்ணோடு மண்ணாக இருந்தது
மண்ணோடு தனை காத்து
மறைந்தே பறவை பூச்சிகளிடமிருந்து தன்னை
மண்ணில் துளிர்ந்தது..

அடைமழை அடித்த போதும்
ஆடி காற்று அடித்த போதும்
அசையாமல் ஆடாமல் இருந்து
ஆர்பரிக்காமல் வளர்ந்தது....

விதை துளிர்ந்து வின் நோக்கி
வியப்போடு பயணம் தொடங்கியது
விடாமல் முயற்சித்து
விட்டது கிளைகளை படிப்படியாக...

விட்ட கிளை நரம்பில்
விடாமல் பற்றிக்கொண்டது இலைகள்
வியர்க்கும் சூரியன்
விட்ட நெருப்பில் பச்சைநிறம் பற்றியது....

சூரியன் தகித்தாலும்
சூழும் இயற்கையின் பரிணாமத்தில்
சூழ்ந்தது இலையில் பச்சைநிறம்
சூசகமாய் இலை வடிவமெடுத்தது...

இலையின் கண்கள் விரிந்தது
இதழோரம் புன்னகையோடு
இலை சுற்றிப் பார்த்தது
இலை மேலிருந்து பார்த்தது
இலை மேலேயும் பார்த்தது
இலையின் உடன் பிறவாக்களை...

இலைக்கு ஒரே பெருமை
இலை மட்டுமே பசுமையாக
இலைக் கிளைகளும் ஆங்காங்கே
இலவச நிறமின்றி வெறுமையாக மரம்...

இலை சூரியனை வணங்கியது
இலையோரம் மஞ்சள் வெய்யிலிட்டப் போது
இலை சக்தியினை வாங்கியது
இயற்கையின் துணையோடு...

இலை உணவருந்தி
இளைப்பார ஓய்வெடுத்தது
இன்பகல் மேலோடியது
இதமாக சூரியன் வருடினான்...

இசைக் காற்று தாலாட்ட
இன்னிசையில் அசைந்தாடியது
இன்றும் பட்டிமன்றமாம்
இலையசைவில் காற்று வந்ததா?
இல்லை காற்று வந்ததால் இலையசைந்ததா?

இலை இசைக் காற்றில் தவழ்ந்தது
இலை தன் உடலசைத்து மகிழ்ந்தது
இப்படியாக வளர்ந்து தழைத்தது
இன்னமும் பெரிதாக...

வானத்தில் சத்தம் இடியாம்
வானமே நடுங்கியது
வான் பார்த்து பயந்தது இலை
வாடைக் காற்று நாசி அடைத்தது...

பாவம் இலை பயந்து நடுங்கியது
பாதி மேல் பார்த்து கீழ் பார்த்து
பாதியினை மடித்து
பாவி காற்றைச் சபித்தது...

நரம்பு முருக்கேறி முயன்று பார்த்தது
நன்றாய் காக்க இயன்றவரை முயன்றது...

என் செய்ய என்னைப் பார்த்தேன்
என்னை வளர்த்த கிளை
என்னைக் காக்க போராடியது
என்னோடு சேர்ந்து காற்றோடு....

என்னைத் திடீரென்று பிரித்தெடுத்தது
எனக்கு உடம்பெல்லாம் வலித்தது
என்னை பிரித்தெடுத்த சதிகாரனானது காற்று
என்னைத் தாலாட்டிய காற்றே
என்னையும் தவிக்க விட்டது...

நான் எங்கே இருக்கிறேன்
நான் வளர்ந்த கிளை
நான் பார்க்கும் போதே
நான் போவதை நினைத்து பதறுகிறது...

என்னோடு பிறந்தவர்கள்
என் முன்னே பிறந்தவர்கள்
எனக்காக வருத்தமிட
என் பொருட்டு க்ரம் நீட்டி அசைந்தாட
என் பயணம் தொடர்கிறது...

என் பயணம் வேகமாகிறது
என்னைத் தாங்கிய மூதாதையரான மரம்
எனக்காக கீழிருந்து அழுகிறது...

தினம் தினம் என் சகோதரி பூ
திண்டாடி விழுந்தபோது தவித்திருக்கிறேன்
தினம் தினம் அவள் சாவில்
திக்கற்று திசையற்று தவித்திருக்கிறேன்...

எனக்காக வாடி அவள்
என்னைச் சேர்த்தணைத்தாள்
என்னை வருடி தழுவினாள்
நான் பூமி வந்த போது....
ஒரு இலையின் பூமி நோக்கி பயணம்

வான் பார்த்த பூமி
வாசமாய் போனதால்
மண் வாசமெடுத்து
மண்ணும் ஈரமானது மழையினால்...

மண்ணில் உறங்கிய விதை
மண்ணோடு மண்ணாக இருந்தது
மண்ணோடு தனை காத்து
மறைந்தே பறவை பூச்சிகளிடமிருந்து தன்னை
மண்ணில் துளிர்ந்தது..

அடைமழை அடித்த போதும்
ஆடி காற்று அடித்த போதும்
அசையாமல் ஆடாமல் இருந்து
ஆர்பரிக்காமல் வளர்ந்தது....

விதை துளிர்ந்து வின் நோக்கி
வியப்போடு பயணம் தொடங்கியது
விடாமல் முயற்சித்து
விட்டது கிளைகளை படிப்படியாக...

விட்ட கிளை நரம்பில்
விடாமல் பற்றிக்கொண்டது இலைகள்
வியர்க்கும் சூரியன் 
விட்ட நெருப்பில் பச்சைநிறம் பற்றியது....

சூரியன் தகித்தாலும் 
சூழும் இயற்கையின் பரிணாமத்தில்
சூழ்ந்தது இலையில் பச்சைநிறம்
சூசகமாய் இலை வடிவமெடுத்தது...

இலையின் கண்கள் விரிந்தது
இதழோரம் புன்னகையோடு 
இலை சுற்றிப் பார்த்தது
இலை மேலிருந்து பார்த்தது
இலை மேலேயும் பார்த்தது
இலையின் உடன் பிறவாக்களை...

இலைக்கு ஒரே பெருமை
இலை மட்டுமே பசுமையாக
இலைக் கிளைகளும் ஆங்காங்கே
இலவச நிறமின்றி வெறுமையாக மரம்...

இலை சூரியனை வணங்கியது
இலையோரம் மஞ்சள் வெய்யிலிட்டப் போது
இலை சக்தியினை வாங்கியது
இயற்கையின் துணையோடு...

இலை உணவருந்தி 
இளைப்பார ஓய்வெடுத்தது
இன்பகல் மேலோடியது
இதமாக சூரியன் வருடினான்...

இசைக் காற்று தாலாட்ட
இன்னிசையில் அசைந்தாடியது
இன்றும் பட்டிமன்றமாம்
இலையசைவில் காற்று வந்ததா?
இல்லை காற்று வந்ததால் இலையசைந்ததா?

இலை இசைக் காற்றில் தவழ்ந்தது
இலை தன் உடலசைத்து மகிழ்ந்தது
இப்படியாக வளர்ந்து தழைத்தது
இன்னமும் பெரிதாக...

வானத்தில் சத்தம் இடியாம்
வானமே நடுங்கியது
வான் பார்த்து பயந்தது இலை
வாடைக் காற்று நாசி அடைத்தது...

பாவம் இலை பயந்து நடுங்கியது
பாதி மேல் பார்த்து கீழ் பார்த்து
பாதியினை மடித்து 
பாவி காற்றைச் சபித்தது...

நரம்பு முருக்கேறி முயன்று பார்த்தது
நன்றாய் காக்க இயன்றவரை முயன்றது...

என் செய்ய என்னைப் பார்த்தேன்
என்னை வளர்த்த கிளை
என்னைக் காக்க போராடியது
என்னோடு சேர்ந்து காற்றோடு....

என்னைத் திடீரென்று பிரித்தெடுத்தது
எனக்கு உடம்பெல்லாம் வலித்தது
என்னை பிரித்தெடுத்த சதிகாரனானது காற்று
என்னைத் தாலாட்டிய காற்றே
என்னையும் தவிக்க விட்டது...

நான் எங்கே இருக்கிறேன்
நான் வளர்ந்த கிளை
நான் பார்க்கும் போதே
நான் போவதை நினைத்து பதறுகிறது...

என்னோடு பிறந்தவர்கள்
என் முன்னே பிறந்தவர்கள்
எனக்காக வருத்தமிட
என் பொருட்டு க்ரம் நீட்டி அசைந்தாட
என் பயணம் தொடர்கிறது...

என் பயணம் வேகமாகிறது
என்னைத் தாங்கிய மூதாதையரான மரம்
எனக்காக கீழிருந்து அழுகிறது...

தினம் தினம் என் சகோதரி பூ
திண்டாடி விழுந்தபோது தவித்திருக்கிறேன்
தினம் தினம் அவள் சாவில்
திக்கற்று திசையற்று தவித்திருக்கிறேன்...

எனக்காக வாடி அவள்
என்னைச் சேர்த்தணைத்தாள்
என்னை வருடி தழுவினாள்
நான் பூமி வந்த போது....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...