Wednesday 20 March 2013

பணம் தேடும் பயணமிது.......

என் புரட்டப்படாத நாளேடுவிலிருந்து... - ஆச்சரிய கேள்விகளுடன் விடைக்காக

வான் பார்த்து பூமி காய்ந்திருந்தது
வானவில்லும் நிறமறந்து போனது
வான் வெய்யிலில் ஜொலித்தது
வான வீதியில் சூரியன் ஆட்சி செய்தது....

நிலவும் இருளில் கொதித்தது
நில்லாமல் பயணித்து நாட்களை நகர்த்தியது
நிற்குமோ நிலைக்குமோ என
நிலை குலைந்து போனது பூமியும்...

மரம் நிறம் மறந்து போனது
மரமாய் போன மக்கள்
மறந்து போயினர் மரத்தினை
மரத்து போயினர் மனிதர்கள்....

காணொலி காட்சியானது தண்ணீரும்
காணாத காட்சியானது நன்நீரும்
காணல் நீரும் காத்திருப்பில்
காட்சிப் பொருளானது மக்களுக்கு...

விதை வடிவமிழந்து வண்ணமிழந்து
விருட்சத்திற்கு விலாசம் தேடுகிறது
விரசம் மறந்து பூமியும் விலக்கிட்டது
விதை விடியல் தேடுகிறது ஓளியுனுள்...

மரம் பார்த்த பூமி கட்டிடங்களில்
மடிந்து போனது செம்மண்ணும் கரிசலும்
மண்புழுவாய் மனிதர்கள் பூமியரித்து
மண்ணில் ஈரமும் மரித்து போனது....

எங்கே அறிவியல்? எங்கே விஞ்ஞானிகள்?
எங்கே தேடுவீர்கள்? எங்கெங்கினும் மனிதர்கள்
எதைப் பார்த்தாலும் கேட்டாலும் கொடுத்தாலும்
எங்கிருந்து வந்ததோ பணம்...

பணம் தேடும் பயணமிது.......

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...