Wednesday 20 March 2013

மின்னல் மின்னியும் மழை வரவில்லை


தொடுத்து வச்ச மொட்டும் அவள்
எடுத்து வைக்க ஆளின்றி 
கடுத்து மனம் உள்ளிருந்து 
விடுத்து சென்றது ஆசை பல....

நித்தம் நித்தம் பூக்காம அவள்
சத்தமின்றி காயப்பட்டுச் சந்தையிலே
எத்தன் யாரென்று காத்திருந்து
வித்தன் மேல் கொண்ட ஆசை பல....

பூக்காத பூவென்ற மொட்டான அவள்
சிக்காத மாதுமது சந்தையிலே
விற்காத ரோசா இதழ்விரித்து
கருக்காது கொண்ட ஆசை பல...

விரிக்காத பாயினிலே துயில அவள்
கரிக்காத அன்போடு சந்தையிலே
சிரிக்காத முகத்திற்கும் இதழிட்டு
எரிக்காது கொண்ட ஆசை பல...

ஒன்று வர காத்திருந்து அவள்
நின்று நின்று நொந்தது சந்தையிலே
கன்று காண பசுவுமது காத்திருந்து
என்றும் தீரா கொண்ட ஆசை பல...

தீர்ந்திடும் கவலையெல்லாம் காத்திருந்து அவள்
தீரா ஆசையோடு நீர்த்தது சந்தையிலே
தீர்ந்தது கனவோடு கன்னியுமே காத்திருந்து
தீரந்தது ஆசையும் காலத்தோடு பல...

மின்னல் மின்னியும் மழை வரவில்லை
மிரண்டனவோ கார் மேகம் கூடி கொட்டிடவோ
மின்னல் கொடி வாழ்க்கையில் மகிழ்ச்சியினை
மின்னாமல் மிளிர்ந்தவள் அந்த முதிர்கன்னி....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...